போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளை பூவே... சுரபியை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை: இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுரபி

தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என்பதால் இப்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்

கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகையாக மாறி வரும் சுரபி இப்பொழுது போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளைப் பூ போல செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 பக்கத்து வீட்டு பெண் போல

பக்கத்து வீட்டு பெண் போல

இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுரபி. இவன் வேற மாதிரி திரைப்படத்தில் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் அளவு கடந்த அன்பை அள்ளி கொடுத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஹீரோயின் கதாபாத்திரங்கள் வரும் என நினைத்த சுரபிற்கு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது

 தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால்

தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால்

இந்த வகையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார். அதை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் ஜீவா என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து சென்றார். முதல் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரைப் படங்களில் கவனம் செலுத்தி இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

 பல ஆண்டுகளாக ரிலீஸாக முடியாமல்

பல ஆண்டுகளாக ரிலீஸாக முடியாமல்

தமிழில் கடைசியாக புகழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜெய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த அடங்காதே அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ் ஆக உள்ளது. இருப்பினும் பல்வேறு பிரச்சனைகளால் இந்த படம் பல ஆண்டுகளாக ரிலீஸாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது

Recommended Video

Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil
 போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளை பூவே

போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளை பூவே

இனியும் தமிழில் வேலைக்கு ஆகாது என நினைத்த சுரபி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்ட சுரபி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறியுள்ளார். படங்களிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவர்ச்சி காட்டி வரும் இவர் இப்பொழுது படுக்கையறையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளை பூவே என வர்ணிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X