ஆண் நண்பருடன் சர்ச்சையில் சிக்கிய சுரேகா வாணி.. மொட்டை அடித்து அடையாளமே தெரியல.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தி வரும் சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர். படங்களில் படுபிஸியாக நடித்து வரும் சுரேகா வாணி, இன்ஸ்டாகிராமில் தவறாமல் விதவிதமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனுஷ் மற்றும் ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான சுரேகா வாணி, அந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, சித்தார்த் மற்றும் அமலா பால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதன் பின் விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கருக்கு மனைவியாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

Actress Surekha vani latest photos trending on social media

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கணவர் இறந்தார்: நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். அண்மையில் இவர், தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது. ஆனால், இதுகுறித்து நடிகை சுரேகா வாணி எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.

Actress Surekha vani latest photos trending on social media

தயாரிப்பாளருடன் காதலா: இதையடுத்து, நடிகை சுரேகா வாணி, நைட் பார்ட்டியில் தனது ஆண் நண்பரான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தெலுங்கு திரைத்துறையில் பெரும் பேசுபொருளானது. 45 வயதான சுரேகா வாணி, கேபி சௌத்ரியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவர் திருமணம் செய்து கொள்ளஇருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Actress Surekha vani latest photos trending on social media

பதறிப்போன ரசிகர்கள்: இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை சுரேகா வாணி, மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் என்ன என்று கேட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் திருப்பதிக்கு நடந்து சென்ற சுரேகா வாணி, நேர்த்திக் கடனை செலுத்தி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X