6 வருடம் தனிமையில் வாழ்க்கை.. அம்மாவிற்கு மறுமணம்? சுரேகா வாணியின் மகள் பேட்டி!

சென்னை: சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நடிகை தான் சுரேகா வாணி. இவருக்கு 48 வயதான போதும் இப்போதும் அதே அழகுடன் இளமையாகவே இருக்கிறார். இவருக்கு 48 வயதாகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு அழகு குறையாமல் தனது உடல் அழகை பேணி காத்து வருகிறார் சுரேகா. கணவரை இழந்து மகளுடன் வாழ்ந்து வரும் இவருக்கு மறுமணம் செய்ய விரும்புவதாக அவரது மகள் கூறியுள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் இவரை அதிகமாக பார்க்க முடியும். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதன் பின், காதலில் சொதப்புவது, தெய்வத்திருமகள், உதயம் என்எச்4, ஜில்லா, மெர்சல், சக்கைப்போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

surekha vani daughter marriage
Photo Credit:

கணவர் உயிரிழந்தார்: நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். கணவர் இறந்த பின், மகளுக்காக ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நைட் பார்ட்டியில் தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி தெலுங்கு திரைத்துறையில் பெரும் பேசுபொருளானது. சுரேகா வாணியும் கேபி சௌத்ரியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவியது.

surekha vani daughter marriage
Photo Credit:

அம்மாவிற்கு மறுமணம் செய்ய வேண்டும்: இந்நிலையில், சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா தெலுங்கு ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், என்னுடைய அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய திருமணம் நடக்கும் முன்பே என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் இதுபற்றி என் சொந்தக்காரர்களிடம் பேசி விட்டேன். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். அம்மாவை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும் அப்படியான ஒருவர்தான் அம்மாவுக்கு சரியானவராக இருப்பார். என் அப்பா இடத்தை வேறு யாருக்கும் தரக்கூடாது என அம்மா நினைக்கிறார் அதையும் நான் மதிக்கிறேன் என சுப்ரதா அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X