47 வயதில் இப்படியா?..போதையில் ஓவர் ஆட்டம்.. ட்ரெண்டாகும் நடிகையின் வீடியோ..வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஃபேமஸானவர் சுரேகா வாணி. தமிழில் அவர் தெய்வ திருமகள், மாஸ்டர் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு வயது 47. டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 47 வயதில் இப்படியா என்றும் அவர்கள் கேள்விகள் எழுப்பிவருகிறார்கள்.
சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து பிரபலமானதுபோல் குணசித்திர வேடங்களில் நடித்தும் பயங்கரமாக பிரபலமானவர்கள் உண்டு. ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே சென்று சேர்ந்தது உண்டு. இதன் காரணமாக ஒரு காலத்தில் ஹீரோ, ஹீரோயினாக கலக்கியவர்கள்கூட இப்போது கேரக்டர் ரோலில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். சரண்யா, ராதிகா, சத்யராஜ், சரத்குமார் என்று அந்த லிஸ்ட் ஏராளம் உண்டு.

குணசித்திரத்திற்காகவே படைக்கப்பட்டவர்கள்: அதேசமயம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே குணசித்திர கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கியவர்களும் உண்டு. இளவரசு, ஜார்ஜ் மரியம் போன்ற நடிகர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள். இவர்களில் இளவரசு மட்டும் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஒளிப்பதிவாளராக இருந்தபோதுகூட அவருக்கு இந்த அளவு வெளிச்சம் கிடைக்கவில்லை. நடிகர்களை போல் நடிகைகளிலும் பெரிய லிஸ்ட்டே ஒன்று. அவர்களில் ஒருவர்தான் சுரேகா வாணி.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்: சுரேகா வாணி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் 2003ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸான டைகர் ஹரிசந்திர பிரசாத் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் குணசித்திர நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து டோலிவுட்டில் நடித்துவந்த அவர் தமிழில் 2010ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான உத்தமபுத்திரன் படத்தில் நடித்து கோலிவுட்டுக்கு அறிமுகமானார்.
வரிசையாக படங்கள்: தமிழிலும் அவருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அதன்படி அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் தெய்வ திருமகள், உதயம் NH 4, எதிர் நீச்சல், ஜில்லா, பிரம்மன், மெர்சல், சக்கைப்போடு போடு ராஜா, விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன், மாஸ்டர் என ஏராளமான படங்களில் நடித்தார். தமிழில் எப்படி பிஸியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு தெலுங்கிலும் படு பிஸியாக இருக்கிறார் அவர். தமிழில் இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சுரேகா வாணியின் குடும்பம்: சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகள் இருக்கிறார். சுரேஷ் தேஜா தெலுங்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட டிவி ஷோக்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் இயக்கிய டிவி ஷோவை தொகுத்து வழங்கிதான் சுரேகா முதன்முறையாக டெலிவிஷன் உலகில் அடியெடுத்து வைத்தார். அவர் உடல்நல குறைவால் கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். சுரேஷின் மரணத்துக்கு பிறகு சிங்கிளாக இருக்கும் சுரேகா தனது மகளை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இதற்கிடையே சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருப்பவர் சுரேகா. தனது மகள் சுப்ரிதாவுடன் நடனம் ஆடும் சில வீடியோக்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது பப் ஒன்றுக்கு சென்றிருக்கும் அவர் கையில் மது கோப்பையுடன் முழு போதையில் நடனம் ஆடிய வீடியோதான் அது. இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் 47 வயதில் இப்படியா என்று வறுத்தெடுக்க; மறுதரப்பு ரசிகர்களோ அது அவரது உரிமை இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று சப்போர்ட் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











