Swasika: சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து நடிகை.. ரீ-என்ட்ரி பலமாத்தான் இருக்கு!
சென்னை: நடிகை சுவாசிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழில் சிறப்பான ரீ-என்ட்ரியை கொடுத்துள்ளார் சுவாசிகா.
லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு மாமியாராக கெத்து தினேஷிற்கு மனைவியாக நடித்திருந்தார் சுவாசிகா., இந்நிலையில் அடுத்ததாக சூர்யா -ஆர்ஜே பாலாஜி காம்பினேஷனில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை சுவாசிகா: சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சுவாசிகா. இந்த படங்கள் இவருக்கு சிறப்பாக கை கொடுக்காத நிலையில் மலையாள கரையோரம் ஒதுங்கினார். அங்கு சுவாசிகாவிற்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து அங்கேயே செட்டிலானார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் வளர்ந்த பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார் சுவாசிகா. படத்தில் ஹீரோவாக சுவாசிகாவின் மருமகனாக நடித்திருந்த ஹரிஷ் கல்யாணைவிட இவர் இளையவர் என்பது கூடுதல் தகவல்.
சூர்யா 45 படத்தில் சுவாசிகா: நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சுவாசிகா ரீ-என்ட்ரி கொடுத்திருந்த லப்பர் பந்து படம் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று தந்துள்ளது. கெத்து தினேஷுக்கு ஜோடியாக படத்தில் நடித்திருந்த சுவாசிகா இந்த படம் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை தற்போது கவர்ந்துள்ளார். இதையடுத்து தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷாவும் இணைந்துள்ள நிலையில் சுவாசிகாவிற்கு படத்தில் முக்கியமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பலமான ரீ-என்ட்ரி: முன்னதாக நயன்தாரா, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படத்தை சூர்யா, திரிஷா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்க இயக்கவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் பூஜையுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சுவாசிகா இணைந்துள்ளார். தமிழில் லப்பர் பந்து படம் மூலம் தன்னுடைய ரீ-என்ட்ரியை பலமாக போட்டுள்ளார் இவர். இந்நிலையில் அடுத்தடுத்து அவரது படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி போலீஸ் அதிகாரியாக சுவாசிகா: இதனிடையே மலையாளத்தில் ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என்ற இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்திலும் அதிரடி போலீஸ் அதிகாரியாக லீட் கேரக்டரில் நடித்துள்ளார். லப்பர் பந்து படத்தில் மாமியாராக வயதான கேரக்டரில் நடித்த போதிலும் படம் அவரது கேரியர் பெஸ்டாக அமைந்துள்ளது. இதுபோன்ற அழுத்தமான கதைக்களங்களில் அவர் அடுத்தடுத்து இணைவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே சூர்யா 45 படத்தில் நடிகர் நட்ராஜும் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











