கெத்து மனைவி போட்ட ஆட்டத்தை பாருங்க.. எந்த பாட்டு தெரியுமா?.. ஊர் உலகமே இதுதான் டிரெண்டிங்!

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் இந்தியாவை தாண்டி உலகளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. எங்கு பார்த்தாலும் கனிமா வைப்போடு தான் அவரது ரசிகர்கள் அலைமோதுகின்றனர். பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகளால் கவனம் பெற்ற இந்த பாடலுக்கு லப்பர் பந்து பட நடிகை போட்டிருக்கும் குத்தாட்டம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் பார்க்க அடக்கமாக இருந்துவிட்டு இப்படி இறங்கி குத்தாட்டம் போட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்த்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூக்கள் இளம் காதலர்களின் மனதை கொள்ளையடித்தது. அதேபோன்று கடந்த மாதம் வெளியான கனிமா பாடல் உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. சமூகவலைதள பக்கங்களை ஆக்கிரமித்துள்ள இந்த பாட்டிற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். அரபிக் பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகளை பார்த்து ரசிகர்கள் சொக்கி போனார்கள். அதேபோன்று கனிமா பாடலில் பூஜா ஹெக்டே போட்ட டான்ஸ் ஸ்டெப்புகளை அனைத்து தரப்பு மக்களும் ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிடுகின்றனர்.

actress swasika kanima song dance video viral

இந்நிலையில், நடிகை ஒருவர் போட்டிருக்கும் ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோரிப்பாளையம், கண்டதும், காணாததும் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுவாசிகா. தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு சில படங்களே நடித்திருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்து நற்பெயரை பெற்று வரும் இவருக்கு தமிழில் நடிகையாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இவரை விடவில்லை. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார்.

கெத்து மனைவி: கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷிற்கு மனைவியாக நடித்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார். இப்படத்தி்ல், எளிய குடும்பத்து பெண்ணாக மனதில் நின்றார். படம் முழுக்க கெத்தாக இருக்கும் பூமாலை மனைவியிடம் குழந்தை போல உடைகிற இடத்தில் பர்ஃபாமன்ஸ் மனதை கசிய வைத்தன. கெத்து போன்ற ஆண்களுக்கு மனைவியாக இருக்கும் பெண்களின் நிலையை புரிய வைக்கும் விதத்தில் இருந்தன சுவாசிகாவின் நடிப்பு. லப்பர் பந்து படத்தின் மூலம் சுவாசிக தனது செகன்ட் இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். விஜய் சேதுபதி, சூரி, சூர்யா ஆகியோர் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

actress swasika kanima song dance video viral

கனிமா பாட்டுக்கு நடனம்: லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு அனைவரது கவனமும் சுவாசிகாவின் பக்கமும் திரும்பியிருக்கிறது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகும் கனிமா பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார். பூஜா ஹெக்டேவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தனது நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சுவாசிகா. செம மாஸ் பர்பாமென்ஸ் தந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடனத்தை பார்த்து கெத்து மனைவிக்கு ஆட தெரியுமா என்றும் ஜாலியாக கேட்க தொடங்கிவிட்டனர். சுவாசிகா என்ற பெயரை மறந்து கெத்து மனைவி என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X