அபர்ணா முரளி, நிமிஷா மாதிரி நானும் நடிக்கனும்.. காத்திருக்கும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா!
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது லப்பர் பந்து. கிராமத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் மற்றும் அழுத்தமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வெற்றி படத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இரண்டு தனிப்பட்ட நபர்களின் ஈகோவை களமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ள நிலையில் இந்தப் படத்தில் தினேஷின் மனைவியாக நடித்துள்ள சுவாசிகா மிகப்பெரிய அளவில் தன்னுடைய நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துள்ளார். அவருக்கு நடிக்க கிடைத்த சிறப்பான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகை ஸ்வாசிகா: நடிகர் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ரப்பர் பந்து படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கிராமங்களில் ஆடப்படும் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் சிறப்பான திரைக்கதையுடன் அமைந்தால் அந்த படம் தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகும். அந்த வகையில் இந்த படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ளார்.
லப்பர் பந்து படம்: அவரது கேரக்டர் வெளியில் ஈகோவை காட்டும் வகையிலும் குடும்பத்திற்குள் தன்னுடைய மனைவி மற்றும் மகளிடம் அடங்கிப் போகும் கேரக்டராகவும் அமைந்துள்ளது. பார்க்கிங் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கேரக்டர் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்திலும் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை மையமாகக் கொண்டே கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில் லப்பர் பந்து படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மலையாள நடிகை சுவாசிகா.
தமிழில் ரீ-என்ட்ரி: முன்னதாக தமிழில் வைகை படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்த சுவாசிகா, கோரிப்பாளையம், சாட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து இனி தமிழ்ப்படங்கள்தான் தனக்கு எல்லாமே என்று நினைத்திருந்த சுவாசிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையாத நிலையில், தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு லப்பர் பந்து படம் மூலம் சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்துள்ளார். லப்பர் பந்து படம் அவருக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் மிகச்சிறப்பான கேரக்டராக அமைந்துள்ளது. அதை சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளார் சுவாசிகா.
அபர்ணா முரளி, நிமிஷா போல நடிக்கனும்: முன்னதாக சூர்யாவுடன் அபர்ணா முரளி நடித்திருந்த சூரரைப் போற்று படத்தின் கேரக்டர் மற்றும் சித்தா படத்தில் நிமிஷா நடித்திருந்த கேரக்டர்களை போல தனக்கும் நடிக்கும் வாய்ப்புகளை கொண்ட கேரக்டர்கள் அமைய வேண்டும என்று தன்னுடைய எதிர்பார்ப்பை சுவாசிகா வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற அழுத்தமான கேரக்டர்கள் இனிவரும் காலகட்டங்களில் தனக்கு அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். லப்பர் பந்து படத்தில் மாடுகளுடன் அன்னியோன்யமாக நடிக்கும் போது தனக்கு முதலில் மிகவும் அச்சமாக இருந்ததாகவும் ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் தான் பழகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகமான ஹோம் வொர்க்: இதே போல கறி வெட்டும் தொழில் செய்யும் கேரக்டராகவும் சுவாசிகா இந்த படத்தில் நடித்துள்ளார் இந்த கேரக்டருக்காக இயக்குனர் தன்னை முன்னதாக தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாகவும், தன்னுடைய ஊரில் இதற்கான ரிகர்சலை செய்ததாகவும் சுவாசிகா தெரிவித்துள்ளார். லப்பர் பந்து படம் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து சிறப்பான படங்கள் அவருக்கு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











