நடிகை சுவாதிக்கு ஆண் குழந்தை!

வான்மதி, தேவா, சொக்கத்தங்கம், யோகி ஆகிய படங்களில் நடித்தவர் சுவாதி. கொஞ்ச காலம் ஸ்வாதிகா என்ற பெயரில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் கிரண் என்ற சாப்ட்வேர் என்ஜீனியரை மணந்துகொண்டு ஆந்திராவில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை.
அவருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர்.
'குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. குழந்தையையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதே என் வேலை. இனிமேல் சினிமாவுக்கு வரும் எண்ணமே இல்லை. நடித்தவரை போதும்,' என்றார் சுவாதி!
Comments


Click it and Unblock the Notifications