அது நான் இல்லைங்க.. ஃபேக் ஐடி.. சமூக வலைதள கணக்குகள் குறித்து நடிகை சுவாதி அதிரடி அப்டேட்!

சென்னை: நடிகை சுவாதி ரெட்டி, தனது பெயரில் வலம் வரும் போலி கணக்குகளை வெளுத்து வாங்கி உள்ளார்.

Recommended Video

Wow! First kiss | Sameera Reddy funny Q&A Video | Bloopers

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுவாதி ரெட்டி, சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய நடிகை

தென்னிந்திய நடிகை

தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் சுவாதி ரெட்டி, பின்னர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சுவாதி ரெட்டி, மலையாள சினிமா உலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சுவாதி நடிப்பில் திரிச்சூர் பூரம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து வந்தார் சுவாதி ரெட்டி. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், கணவருடன் பிரச்சனை என்றும், இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஃபேக் ஐடி

ஃபேக் ஐடி

இந்நிலையில், சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தான் இல்லை என்றும், தனது பெயரில் வலம் வரும் போலி கணக்குகள் குறித்த தகவல் தனக்கு கிடைத்ததாகவும், அதனால், மிகுந்த அப்செட் ஆனதால், இந்த பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகிறேன். அந்த ஃபேக் ஐடிக்களை யாரும் பின் தொடர வேண்டாம், என்றும் இவங்களுக்கு ஏன் இந்த பொழப்பு என்றும் கேட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் மட்டும்

இன்ஸ்டாவில் மட்டும்

ட்விட்டரில் தான் இதுவரை எந்தவொரு கணக்கும் தொடங்கவில்லை என்றும், ஃபேஸ்புக்கில் இருந்து 2011ம் ஆண்டே வெளியேறிவிட்டேன் என்றும் கூறிய நடிகை சுவாதி, இன்னும் ஏன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் என்பது தனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை இதுபோன்ற போலி கணக்குகள் குறித்த விளக்கம் அளிக்க இது இப்போது உதவி இருக்கிறது என்றும் சுவாதி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X