உள்ளாடை அளவு பத்தி டிவி நடிகையோட பேச்ச பாருங்க... ஒரு வரைமுறை இல்லையா?
மும்பை : பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி.
41 வயதான இவர் பட விளம்பர விழாவில் நகைச்சுவையாக தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஸ்வேதா திவாரி
பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி. பாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளார். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கடந்த 2011ல் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய இணைய தொடரில் ஸ்வேதா
ரோஹித் ராய், திகங்கனா சூர்யவன்றி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள புதிய இணைத் தொடரில் இவர் நடித்துள்ளார். இதுகுறித்த விளம்பர நிகழ்ச்சியில் இரு தினங்களுக்கு முன்பு பங்கேற்றார். அப்போது அவர் காமெடியாக தெரிவித்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஷோ ஸ்டாப்பர் வெப் தொடர்
ஸ்வேதா திவாரி தொடர்ந்து பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது ஷோ ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். அதன் விளம்பர நிகழ்ச்சியில்தான் சர்ச்சைக்குரிய பேச்சு பேசியுள்ளார் ஸ்வேதா திவாரி. கடவுள் தனது உள்ளாடையின் அளவை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

உள்ளாடை குறித்த பேச்சு
இந்த தொடரில் பிரபல மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணராக நடித்துள்ள சௌரப் ஜெயின், இந்த தொடரில் மாடல்களுக்கு உள்ளாடை பொருத்தும் வேடத்தில் நடித்துள்ளார். அவரை சுட்டிக்காட்டியே கடவுள் தனது உள்ளாடைக்கு அளவெடுக்கிறார் என்று ஸ்வேதா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குள்ளான பேச்சு
அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பேச்சு குறித்து 24 மணிநேரத்தில் விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் அறிக்கை அளிக்கவும் மாநில மந்திரி நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த அறிக்கையையொட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் விவகாரத்தில் நடவடிக்கை
முன்னதாக சன்னி லியோனின் நடத்தில் சரிகமா மியூசிக் நிறுவனம் வெளியிட்ட பாடல் காணொலியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டதையடுத்து அந்த காணொலி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











