“ஆமா இப்போ ஒருத்தரோட ரிலேசன்ஷிப்ல இருக்கேன்.. குழந்தை வேணும்னா டும் டும் டும்” ஓப்பனாக பேசிய டாப்சி
தான் ஒருவரை காதலிப்பதாக நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: தான் ஒருவரை காதலிப்பதாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தியில் தற்போது பிஸியான நடிகை. குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மிஷன் மங்கள் படம் வசூல் மழை பொழிந்தது. அடுத்ததாக ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் தடகள வீராங்கனையாக அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு டாப்சி அளித்துள்ள பேட்டியில், தான் ஒருவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலர்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ , கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவரும் இல்லை.

எப்போது திருமணம்
வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன். திருமண பந்தத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நெருங்கிய உறவினர்கள் மட்டும்
எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். திருமண வைபவம் ஒரேநாளில் நடக்க வேண்டும். நிறைய நாட்கள் அதை நடத்தக்கூடாது. இதற்கு மேல் திருமணத்தை பற்றி என்னால் விவரிக்க முடியாது", என திட்டவட்டமாக கூறியுள்ளார் டாப்சி.

தங்கை மூலம் அறிமுகம்
இந்த பேட்டியின் போது டாப்சியுடன் அவரது தங்கையும் இருந்தார். தன் மூலம் தான் டாப்சி அவருடைய வருங்கால கணவரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் தனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தங்கை குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











