கல்யாணம் என்னோட பர்சனல்.. ரகசிய திருமணம் குறித்து டாப்ஸி பேட்டி!

சென்னை: தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டாப்ஸி இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில்இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரியானார். இவர், வெற்றிமாறன்இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில், தனுஷ் ஜோடியாக ஆங்கிலோ இந்தியனாக நடித்திருந்தார் டாப்ஸி. இவரின் முதல் தமிழ் படமே வேறலெவல் வெற்றியைபெற்றுக்கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து,வந்தான் வென்றான், வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால்,தமிழில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், பாலிவுட் பக்கம் சென்ற அவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Actress taapsee pannu opens up her intimate wedding

நடிகை டாப்ஸி பன்னு: மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சபாஷ் மிது திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். அண்மையில் இவர், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படங்கள் வசூலை அள்ளியது.

ரகசிய திருமணம்: 10 ஆண்டு காதல்: பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருக்கும் டாப்ஸி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போ 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில்,உதய்பூரில் கடந்த 23 ஆம் தேதி டாப்ஸி, தனது காதலர் மத்தியாஸ் போயேவை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் திருமணத்தில், இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், திருமணம் குறித்து டாப்ஸி இதுவரை எந்த ஒரு போட்டேவையும் பதிவிடவில்லை.

கல்யாணம் என்னோட பர்ஷனல்: இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டாப்ஸி பன்னு, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிர வேண்டுமா என நான் யோசித்தேன். அதனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம், ரகசியமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, என்னுடைய பர்சர்னல் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு சொல்ல நான் விரும்பவில்லை. பொதுவாக பிரபலம் திருமணம் செய்தால் எப்படி எல்லாம் பல விதமாக பேசுவார்கள் அதற்கு நான் மனதளவில் தயாராகவில்லை. ஆனால், நான் ஏற்றுக்கொள்வேன், ஆனால் என்னுடைய கணவர் அதை ஏன் சந்திக்க வேண்டும். அதன் பிரைவேட் நிகழ்ச்சி நடத்தினோம் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X