சகோதரிக்காக கோடியை வாரி இறைக்கும் டாப்ஸி பன்னு.. மும்பையில் பல கோடியில் அப்பார்ட்மெண்ட்!
மும்பை: பஞ்சாப்பை சேர்ந்த நடிகை டாப்ஸி பன்னு தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர், மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கி உள்ளார்.
நடிகை டாப்ஸி பன்னு தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நடித்தன் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், வை ராஜா வை, கேம் ஓவர், காஞ்சனா 2, அனபெல் சேதுபதி ஆகிய படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாலிவுட் பக்கம் சென்ற இவர், மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற படங்களில் நடித்தார். மேலும், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான 'சபாஷ் மிது' திரைப்படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலை வாரிக்குவித்தது

திறமையான நடிகை: டாப்ஸி பன்னு Blurr படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக மணிக்கணக்கில் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தேன் என்றும், அதன் பிறகு தான் என்னால் அதிகம் கேட்க முடிந்தது, சிந்திக்க முடிந்தது, பார்க்க முடியாத போதுதான் உங்கள் மற்ற புலன்கள் தானாகவே சமநிலையில் இருக்கும் என்பதை உணர முடிந்தது என்றார். மேலும், நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது ரசிகர்கள் தொடர்ந்து வந்து படம் எடுக்கின்றனர். காரின் ஜன்னலில் கேமராவை வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று பேட்டியில் கூறியிருந்தார்.
பல கோடியில் வீடு: நடிகை டாப்ஸி பன்னு தமிழில் கடைசியாக விஜய்சேதுபதியுடன் அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு எந்த படமும் வெளியாக வில்லை. இந்தியில், டாப்ஸி பன்னு கடைசியாக 'கேல் கேல் மெய்ன்' படத்தில் நடித்திருந்தார். டான்ஸி அடுத்ததாக 'காந்தாரி', 'வோ லட்கி ஹை கஹான், முல்க் போன்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், டாப்ஸி தனது சகோதரியுடன் சேர்த்து மும்பையில் பல கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள கோரேகானில் ரூ.4.33 கோடியில் உயர் ரக அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். 1,669 சதுர அடி கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் நீச்சல் குளம், ஜிம், மினி தியேட்டர் என அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளது.
நடிகை டாப்ஸி பன்னு மற்றும் அவரது சகோதரி ஷகுன் இருவரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கு ரூ.21.65 லட்சத்திற்கு முத்திரை வரியை செலுத்தி உள்ளனர். மேலும் ரூ.30,000 பதிவு கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே மும்பை புறநகர் ரயில்வே நிலையம், ஐடி பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்த இடம் பெரும்பாலான நடிகர்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











