முதல் பார்வையில் காதல் வரவில்லை.. காதல் அனுபவத்தை பகிர்ந்த டாப்ஸி பன்னு!
சென்னை: தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வரும் டாப்ஸி பன்னு பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடக்க வேண்டிய இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக உறவினர்கள் முன் நடைபெற்றது. தற்போது இவர் தனது காதல் அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகை டாப்ஸி பன்னு அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சையமான முகமாக மாறியது ஆடுகளம் படத்தில் தான். 'அட வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாங்களா' என அந்த படத்தில் டாப்ஸியின் நிறத்திற்கு ஒரு பாடலையே படத்தில் வைத்து அசத்தி இருந்தார் இயக்குநர். அதுமட்டுமில்லாமல்,what do you want? என அழகான ஆங்கிலத்தில் பேசி ரசிகர்கள் மத்தியில் பதிந்துவிட்டார். அந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் அள்ளியது.

நடிகை டாப்ஸி பன்னு: அந்த படத்தை தொடர்ந்து, காஞ்சனா 2 , வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதன்ன் பாலிவுட் பக்கம் சென்ற டாப்ஸிக்கு மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன. குறிப்பாக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் படமான சபாஷ் மிது திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாறினார். இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து 'அனபெல் சேதுபதி' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் படுமொக்கையாக இருந்ததால், தோல்வியடைந்தது. அதன் பிறகு தமிழ் படங்களில் டாப்ஸி நடிக்கவில்லை.
காதல் திருமணம்: கடந்த சில மாதங்களுக்கு முன், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் படுபிஸியாக நடித்து வருகிறார்.
அவர் சாதாரண மனிதர் இல்லை: இந்நிலையில், இந்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டாப்ஸி பன்னு, தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், எனக்கு அவரை பார்த்த முதல் பார்வையில் காதல் வரவில்லை. அவரை நான் முதன் முதலில் சந்தித்த போது அவர் மீது எனக்கு மரியாதை தான் வந்தது, அவரை ஒரு சாதாரண மனிதராக நினைக்கவில்லை. அந்த சந்திப்புக்கு பின் அவர் மீது இருந்த மரியாதையால், அடிக்கடி சந்தித்தோம்.
ஒரு கட்டத்தில் என்னை அறியாமலே அவரை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இருந்தாலும் அந்த காதலை நான் உடனடியாக சொல்லவில்லை. அதற்காக நான் பல நாட்களை எடுத்துக்கொண்டேன். இந்த காதல் நடைமுறைக்கு ஒத்துவருமா.. இந்த காதல் நீடிக்குமா… என்று பல முறை யோசித்தேன். இறுதியில் எனக்கானவரை கண்டுபிடித்து விட்டேன் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகே இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம் என்று டாப்ஸி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











