அக்காவும் தங்கச்சியும் வீட்டுக்குள்ளேயே கட்டிய வீட்ட பாருங்க.. வைரலாகும் பிரபல நடிகையின் யோகா போஸ்!
சென்னை: நடிகை டாப்ஸி தனது சகோதரியுடன் சேர்ந்து செய்திருக்கும் யோகா போஸ் வைரலாகி வருகிறது.
தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பிஸியாக இருந்த அவர், சஷ்மி பத்தூர் என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகளும் வாயில் கதவை தட்ட இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு என படு பிஸியாக இருக்கும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை டாப்ஸி.

தங்கையுடன் யோகா
சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக உள்ள டாப்ஸி, அடிக்கடி ஹேர் ஸ்டைலை மாற்றுவது, வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுப்பது என ரசிகர்களை தனது கைக்குள் வைத்து கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் காலையிலேயே தனது தங்கை ஷாகுனுடன் சேர்ந்து யோகா செய்துள்ளார் டாப்ஸி,

கால்களை சேர்த்து
டாப்ஸியின் தங்கையான ஷாகுன் ஒரு வெட்டிங் ஸ்டைலர் ஆவார். டாப்ஸியும் அவரும் சேர்ந்து வீட்டிற்குள்ளேயே வீடு கட்டியுள்ளனர். இருவரும் தலையை கீழே வைத்து கால்களை முன்னோக்கி மேலே தூக்கியப்படி எதிரெதிரே கால்களை சேர்த்து வீடு போன்று அமைத்து யோகா செய்துள்ளனர்.

ராக்கி போஸ்ட்
இருவரும் சிரித்தப்படியே இந்த யோகாவை செய்துள்ளனர். இதற்கு "இதயம் இருக்கும் இடம் வீடு" என்று நடிகை டாப்ஸி கேப்ஷன் கொடுத்துள்ளார். டாப்ஸியும் அவரது சகோதரி ஷாகுனும் அடிக்கடி இன்ஸ்டாவில் அசத்தல் போஸ்ட்களை வெளியிடுவார்கள். கடந்த மாதம் டாப்ஸி தனது ராக்கி போஸ்ட்டை ட்ரென்ட்டாக்கினார்.

மூத்தவர்களாகி..
தனது கையில் ராக்கி கட்டியிருந்த போட்டோவை ஷேர் செய்திருந்த நடிகை டாப்ஸி, தனது சகோதரியையும் கஸினையும் தன் கையில் ராக்கி கட்டும்படி கட்டாயப்படுத்தியதாக கூறினார். மேலும் அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, ராக்கி கட்டிக்கொள்வதன் மூலம் நாம் மூத்தவர்களாகி விடுவோம்.

ரிமோட்டை கேட்கலாம்
இதனால் நம்மை விட சிறியவர்களை தண்ணீர் எடுத்து வரச்சொல்லலாம், ரிமோட்டை எடுத்து தர சொல்லலாம், அவர்களை போட்டு கசக்கலாம் நசுக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். அவரது அந்த பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











