ஃபிட்னஸ்க்காக மட்டும் லட்ச கணக்கில் செலவு செய்யும் பிரபல நடிகை... இதுக்கு இப்படியொரு காரணமா?
மும்பை: தனுஷின் ஆடுகளம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.
அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 2 உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்ஸி, ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஸ்லிம் அன்ட் ஃபிட்னஸுடன் இருப்பதற்காக அவர் பல லட்சம் ரூபாய் செலவழித்து வருவது தான் ரசிகர்களையே தலை சுற்ற வைத்துள்ளது.

வெள்ளாவில வச்சு வெளுத்த புள்ள
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய விருது வென்று அசத்தியது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக முதலில் த்ரிஷா நடித்து வந்தார். ஆனால், அதன்பின்னர் த்ரிஷாவுக்குப் பதிலாக டாப்ஸி நடித்தார். ஆங்கிலோ இண்டியன் பொண்ணாக செம்ம க்யூட்டாக நடித்து அசத்தியிருந்தார் டாப்ஸி. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளிள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

டாப்ஸியின் ஃபிட்னஸ் ரகசியம்
அஜித்துடன் ஆரம்ப, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் டாப்ஸி. இந்தியில் டாப்ஸி நடித்த பிங்க் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், டாப்ஸி தனது ஃபிட்னஸ்க்காக பல லட்சங்களை செலவு செய்து வருகிறாராம். நடிகையாக இருப்பதால் உடலை மெயின்டெய்ன் செய்வது ரொம்பவே முக்கியம் எனவும், அதற்காகவே அதிகம் செலவு செய்வதாக கூறியுள்ளார் அவர்.

இதுதான் ரொம்பவே முக்கியம்
அதன்படி, உணவை முடிவு செய்யும் dieticianக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ருபாய் செலவு செய்வதாக டாப்ஸி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் டயட்டுக்காகவே மட்டு செலவு செய்வது பலரையும் தலை சுற்ற வைத்துள்ளது. இதுபற்றி கூறினால் அப்பா அதிகம் திட்டுவார், இது வீண் செலவு என்பார். ஆனால், இது வீண் செலவு கிடையாது, அத்தியாவசியமான ஒன்று தான் அவரே விளக்கமும் கொடுத்துள்ளார்.

கங்கனா ரனாவத் சர்ச்சை
டாப்ஸி தனது ஃபிட்னஸுக்காக மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவழிப்பது வைரலாகி வரும் நிலையில், அடுத்து ஒரு சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார். அதாவது சில மாதங்களுக்கு முன்னர் கங்கனாவுக்கும் டாப்ஸிகும் இடையே ட்விட்டரில் பெரிய சண்டை நடந்தது. கங்கனாவும் அவரது சகோதரியும் டாப்ஸியை 'சீப்பான நடிகை' என விமர்சித்திருந்தனர். இது கடும் சர்ச்சையானதால் டாப்ஸியும் அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.

பேசுவதில் பிரச்சினை இல்லை
இந்நிலையில், தற்போது அதுகுறித்து பேசியுள்ள டாப்ஸி, கங்கனாவிடம் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக சென்று ஹலோ சொல்வேன், நான் இதையெல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை என நெத்தியடியாக விளக்கம் கொடுத்துள்ளார் டாப்ஸி.


Click it and Unblock the Notifications











