சிம்புவுக்கு கிடைப்பாரா தமன்னா?

சிம்புவின் திரையுலக வாழ்க்கையை விண்ணைத் தாண்டி வருவாயாவுக்கு முன்பு, அதற்குப் பின்பு என இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட மாற்றங்கள். முன்பெல்லாம் முரட்டுக்காளையாக பார்க்கப்பட்ட சிம்புவை இப்போது பார்பி டால் ரேஞ்சுக்கு செல்லமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம் சினிமாவில்.
நம்ம சிம்புவா இது என்று என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு விண்ணைத் தாண்டி வருவாயாவில், சாக்லேட் பாயாக வந்து போனதால் சிம்புக்கு தனி ஸ்டேட்டஸ் வந்துள்ளதாம் தற்போது. அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்களிடையே சின்னதாக ஒரு அலைபாயல் ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் அவரிடம் கதை சொல்ல புது இயக்குநர்கள், பழைய இயக்குநர்கள் என ஏகப்பட்ட பேர் காத்துள்ளனர். ஆனால் தற்போது லிங்குச்சாமியின் படத்தை செய்ய சிம்பு ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னா நடிக்கலாமே என்று கூறியுள்ளாராம் சிம்பு. லிங்குச்சாமியும் பரிசீலனை செய்து வருகிறாராம். ஏற்கனவே லிங்குச்சாமியின் பையா படத்தில் தமன்னாதான் நாயகியாக நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. எனவே சிம்பு படத்திலும் தமன்னா நடிக்க வாய்ப்புள்ளாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











