அருவியில் ஹாயா ஆனந்த குளியல்.. பிரபல நடிகையின் வைரல் பிக்ஸ்
மும்பை : லாக்டவுனில் அனைவரும் என்ன செய்யலாம் என விழிப்பிதுங்கி யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல தமிழ் நடிகை மலை அருவியில் ஆனந்தமாக குளியல் போட்டுள்ளார்.
படப்பிடிப்புகள் இல்லாததால் தொடர்ந்து பல்வேறு விதமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை தமன்னா சில நாட்களுக்கு முன்பு மலையேறும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார்.
இந்நிலையில் இப்பொழுது மலையில் ஹாயாக படுத்துக் கொண்டு இயற்கை காற்றை சுவாசித்தவாறு அருவியில் குளித்துக் கொண்டு ஆனந்தமாக இருக்கும் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பொழுதை எவ்வாறு கழிக்க
உடலையும் மனதையும் எப்பொழுதும் இளமையாகவே வைத்திருக்கும் நடிகை தமன்னா இந்திய சினிமாவை பல ஆண்டுகளாக தனது நடிப்பின் மூலம் ஆட்டிப்படைத்துக் கொண்டு வருகிறார். தமிழில் பையா, வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வெற்றியுடன் வலம் வரும் நடிகை தமன்னா இந்த இக்கட்டான லாக்டவுன் சூழலிலும் பொழுதை எவ்வாறு கழிக்க வேண்டுமென முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்
கடந்த நான்கு மாதங்களாகவே படப்பிடிப்புகள் ஏதுமில்லாமல் திரைத்துறை முற்றிலும் முடங்கிப்போய் எந்த ஒரு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்க முடியாமலும், பல திரைப்படங்களின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டும். என்ன செய்வது என தெரியாமல் இந்த கொரானா பொது முடக்கம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என பலரும் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இளமை ரகசியம்
இவ்வாறு இருக்கையில் பல நடிகைகள் இந்த பொன்னான நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டோஷூட், சமையல் மற்றும் யோகா என தங்களுக்குள் புதைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். பளீச் என்ற தேகத்தில் என்றும் இளமையாகவே காணப்படும் நடிகை தமன்னா அதற்கான ரகசியத்தை பலரும் அறிந்திராத நிலையில் தற்பொழுது அடிக்கடி யோகா செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னுடைய இளமைக்கான ரகசியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

ட்ரக்கிங் செய்த புகைப்படத்தை
இவ்வாறு தான் யோகா செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வந்த தமன்னா சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மலையில் பொடி நடையாக ட்ரக்கிங் செய்த புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் குஷி படுத்திருந்தார்.

வெண்மையான தேகத்தில்
இந்நிலையில் அந்த மலையில் இயற்கை ததும்பிய அருவியில் நீரோட்டம் தமன்னா மீது பொங்கி முழுவதும் நனைய வைத்தவாறு மல்லாக்கப் படுத்துக்கொண்டு வெண்மையான தேகத்தில் நீர் புரண்டோட ஆனந்த குளியல் போட்டவாறு இயற்கை ரசித்துக்கொண்டு பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த ஆனந்த குளியல் கிளிக்கை தமன்னா வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











