கொட்டும் மழையில்..சொட்ட சொட்ட நனைந்து உடற்பயிற்சி.. தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக் !

மும்பை : பால் போன்ற தேகத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் நடிகை தமன்னா தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பையா, பாகுபலி என தனது மிரட்டலான நடிப்பின் மூலம் இன்று வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

அழகும் திறமையும் ஒருசேர அமைந்த தமன்னா சமீபத்தில் பல்வேறு புகைப்படங்களில் தனது மெச்சும் அழகை காட்டி வந்த நிலையில் இப்பொழுது மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி வெட்ட வெளியில் உடற்பயிற்சி செய்துள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கதாநாயகியாக நடிக்க

கதாநாயகியாக நடிக்க

ஹிந்தி திரைப்படங்களில் 15 வயதிலேயே கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த தமன்னா தற்பொழுது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

பளபளக்கும் மேனி பட்டுப்போன்ற உள்ளம் கொஞ்சும் மொழி என ரசிகர்களை அனைத்து வகையிலும் கவர்ந்து வரும் தமன்னா தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை வெற்றிகரமாக வலம் வருகிறார்.

வில்லிகதாபாத்திரத்தில்

வில்லிகதாபாத்திரத்தில்

படையப்பா, நட்புக்காக உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி வந்த ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தமன்னா நடித்த முதல் படத்திலேயே அழகான ராட்சசியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகைகளுக்கு டஃப்

முன்னணி நடிகைகளுக்கு டஃப்

வில்லியாக நடித்த கேடி திரைப்படத்தை தொடர்ந்து கல்லூரி, வியாபாரி என படங்களில் நடித்து வந்த தமன்னா தனுஷுடன் நடித்த படிக்காதவன் மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடித்த அயன் திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமாகி பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்தார்.

வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்த தமன்னா இயக்குனர் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கி இன்று வரை வெற்றி நாயகியாக இருந்து வருகிறார்.

நயன்தாரா ஜோதிகாவை போன்று

நயன்தாரா ஜோதிகாவை போன்று

இதுவரை கதாநாயகர்களுடன் இணைந்து டூயட் பாடி வந்த தமன்னா சமீபத்தில் பெட்ரோமாக்ஸ் என்ற ஹாரர் நிறைந்த காமெடி திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து நயன்தாரா, ஜோதிகாவை போன்று சோலோ ஹீரோயினாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

உடற்பயிற்சி உடையில் முன்னழகு

உடற்பயிற்சி உடையில் முன்னழகு

முன்னணி கதாநாயகியாகவும் சோலோ ஹீரோயினாகவும் நம் அனைவரையும் படங்களின் மூலம் ரசிக்க வைத்து வந்த தமன்னா தற்பொழுது முழு ஊரடங்கு காலத்தில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு உடற்பயிற்சி உடையில் முன்னழகு உட்பட மொத்த அழகையும் பிரமாதமாக காட்டி ரசிகர்களுக்கு லாக்டவுன் எனர்ஜி பூஸ்ட் கொடுத்து குஷிப்படுத்தி உள்ளார். உடற்பயிற்சியும் திறந்தவெளியில் ஆனந்த குளியலும் போட்டவாறு வெளியிட்டுள்ள இந்த சொக்கவைக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை வாரி குவித்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X