'விலகி நின்று ஒன்றிணைவோம்'.. தூர்தர்ஷனில் தமன்னா தமிழில் அட்வைஸ் !

சென்னை : தூர்தர்ஷன் சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை தமன்னா தமிழில் அறிவுரை கூறியுள்ளார்.

Recommended Video

Tamannaah Bhatia Healthy Breakfast Recipe | Lock Down

கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்திய அளவில் 3000 தாண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ஊடகமான பொதிகை தூர்தர்ஷன் பக்கத்தில் வெளியாகியுள்ள தமன்னாவின் காணொளியில், தமிழில் தனது அறிவுரைகளை கூறி இருக்கிறார் தமன்னா.

Actress Tamanna shares corona prevention tips in doordarshan

இதில் தமிழில் எல்லோருக்கும் வணக்கம் என்று கூறி பேச துவங்கிய தமன்னா. நம்மால் கொரோனாவை எளிதாக வீழ்த்த முடியும், அது என்னவென்று நமக்கு தெரியும் அது நாம் வீட்டிலே இருப்பது ஆகும் அது நமக்கு பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் சோப்பால் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

Actress Tamanna shares corona prevention tips in doordarshan

இறுதியாக தமன்னா 'விலகிநின்று ஒன்றிணைவோம்' என்ற வாசகத்தையும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பலரும் முன் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 411ஆக உள்ளது. இந்த நிலையில் அரசு ஊடகத்தின் வாயிலாக தமன்னா பேசியிருப்பது மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Tamanna shares corona prevention tips in doordarshan

தற்போது வீட்டில் 21 நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதால் தமன்னா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். தினந்தோறும் ஒரு காணொளியை இணையத்தில் பகிரும் தமன்னா. ஒவ்வொரு காணொளியிலும் ஒவ்வொன்றை பற்றி தன் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு வீடியோ பதிவின் கீழேயும் குரோன்டைனின் இத்தனாவது நாள் இன்று நான் இதற்காக இதை செய்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கமும் பக்காவாக கொடுத்து விடுகிறார் .

Actress Tamanna shares corona prevention tips in doordarshan

தமன்னா இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தமன்னா பகிரும் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் ரசிகர்களும் தவறாமல் இவரின் காணொளிகளை பார்த்து பகிர்ந்து விடுகின்றனர். தமன்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்தியா முழுக்க இவரின் செயல் பேசபட்டு வருகிறது.

தமன்னா தமிழில் இறுதியாக விஷாலுடன் சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்ஷ்ன் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் 'போல் சௌவுத்தியான்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஷ்வுதின் சித்திக்குடன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சீட்டிமார் மற்றும் தெட் இஸ் மகாலட்சுமி படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X