தமன்னா நடிக்கும் ஒடேலா 2.. டைட்டில் போஸ்டரே சும்மா மிரட்டலா இருக்கே!
சென்னை: ஒடேலா என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒடேலா ரயில் நிலையம் என்ற தலைப்பில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக திரையிடப்பட்டது. இப்படத்தில் ஹெபா பட்டேல், சாய் ரோனக், பூஜிதா பொன்னடா மற்றும் வஷிதா எம் சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஒடேலா 2 என பெயரிடப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது.
ஐபிஎஸ் முடித்த சாய் ரோனக் போலீஸ் பயிற்சிக்காக ஒடேலா என்ற கிராமத்திற்கு செல்கிறார். இதுவரை ஒரு கொள்ளை கூட நடக்காத ஒடேலா கிராமத்தில், திடீரென பலாத்காரங்கள் மற்றும் கொலைகள் தொடர்ந்து நடக்கிறது. இதன் மூலம் கிராமம் முழுவதும் அச்சத்தில் உறைந்து போக, புதுமணத் தம்பதிகள் கொல்லப்பட இந்த வழக்கு காவல் துறைக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. கொலையாளி யார்? அவர் ஏன் கிராமத்தில் திருமணமான பெண்களை பின்தொடர்கிறார்? என்பதும்தான் ஒடேலா ரயில் நிலையம் திரைப்படத்தின் மீதிக்கதை.

கொண்டாடிய ரசிகர்கள்: இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், ஒடேலா இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகும் பன்மொழி திரைப்படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தில், தமன்னா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் ஹெபாப் பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார்.
தமன்னாவின் நடிப்பில்: இப்படத்தினை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம் ஒர்க்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் டி. மது தயாரிக்கிறார். நடிகை தமன்னா நடிப்பில் டிஜிட்டல் தளங்களில் வெளியான திரைப்படங்கள் வெற்றியை பெற்றிருப்பதால் 'ஒடேலா 2' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒடேலா மல்லெண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு வைத்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓடேலா 2: இந்நிலையில், ஃபேண்டஸி மிஸ்டரி திரில்லர் ஜேனரிலான இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் எண் 2 எண்ணுக்குள், சிவனை குறிக்கும் வகையில் பட்டை மற்றும் திரிசூலம் அதன் மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை நாம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதாக இது உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புனித நகரமான காசியில் தொடங்கி உள்ளது. இந்த போட்டோக்களை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
ரொம்ப பிஸி: நடிகை தமன்னா,தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் வேதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் பல முன்னணி பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார் தமன்னா.


Click it and Unblock the Notifications











