கொட்டிக்கிடக்கும் ரோஜா.. ஏக்கத்தோடு காத்திருக்கும் தமன்னா..ராதையாக மாறி போஸ்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடிகை தமன்னா ராதையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரிந்து இருந்த இவரின் மார்க்கெட் இன்று உச்சம் பெற்று உள்ளதால், படங்கள், வெப் தொடர்கள் என அனைத்திலும் மீண்டும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

நடிகை தமன்னா: நடிகை தமன்னா ஹிந்தியில் வெளிவந்த சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்த தமன்னா, கேடி படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் தமிழ்நாட்டு ஹீரோயினாக மாறிய தமன்னா, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், தில்லாலங்கடி போன்ற ஆவ்ரேஜ் படத்தில் நடித்து வந்தார். அதன் பின் கண்டேன் காதலை, பையா, சுறா , சிறுத்தை, வேங்கை, நண்பேண்டா, பாகுபலி, தோழா , தர்மதுரை, தேவி இப்படி பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்: இதனால், குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக மாறிய தமன்னா, தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்தார். திடீரென படவாய்ப்பு குறைய பாலிவுட் பக்கம் சென்ற இவர், லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்தார். குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸில் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் மீண்டும் இவருக்கு படவாய்ப்பு வர, ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரின் வாயையும் பிளக்க வைத்தார். இதைத்தொடர்ந்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது.

கண்ணனுக்காக காத்திருக்கும் ராதா: தற்போது,தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னை ராதாவாக அலங்கரித்துக்கொண்டு, ரோஜா மலர்கள் கொட்டிக்கிடக்கும் மெத்தை மீது கண்ணனுக்காக ஏக்கி காத்து இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில்,தமன்னா தன்னை ராதையாக மாற்றி உள்ளார். இணையத்தில் இந்த போட்டோ, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் களை குவித்து வருகிறது.



Click it and Unblock the Notifications











