ஜன்னல் வச்ச ஜாக்கெட் பாத்து இருப்பீங்க.. தமன்னா போட்ட ஜாக்கெட்டை பாருங்க.. வேற லெவல் போங்க!
சென்னை: தமிழ் சினிமா உலகில் மிகவும் அழகான நடிகையாக வெண்ணையில் செய்த கேக் போல இருப்பவர் நடிகை தமன்னா. இவர் 35 வயதை எட்டிய போதும் இன்னும் அதே அழகால் ரசிகர்களை வளைத்துப்போட்டு வைத்து இருக்கிறார். தற்போது தமன்னா சேலையில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் காண்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மும்பை மகாராஷ்டிராவில் பிறந்த தமன்னா, படித்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். பட வாய்ப்பை தேடி வந்த தமன்னாவிற்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் கேடி என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் வெள்ளையாக இருந்தாரே தவிர நடிப்பு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதன்பின், வியாபாரி,கல்லூரி போன்ற படத்தில் நடித்தார். அப்போது தான் தனுஷூடன் படிக்காதவன் படத்தில் வாய்ப்பு வந்தது அந்த படம் நல்ல வசூலை அள்ளியது.

நடிகை தமன்னா: இந்த படத்தை தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. தமிழ் தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகையாக உள்ளார் தமன்னா. தமன்னாவிற்கு 35 வயதான போதும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். தமன்னாவும் விஜய் வர்மாவும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்ட நிலையில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருந்தார்.
ஜன்னல் வெச்ச ஜாக்கெட்: சினிமாவில் சில நாட்கள் தென்படாமல் இருந்த தமன்னா நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். இந்த படத்தை தொடர்ந்த அரண்மனை 4 படத்தில் கவர்ச்சி காட்டாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது தமன்னாவின் கைவசம்,Sikandar Ka Muqaddar என்ற இந்தி படத்திலும் Odela 2 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் Daring Partners என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது தமன்னா, புடவையில் அழகாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில், வித்தியாசமான ஜாக்கெட்டில் இருக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் ஜன்னல் வச்ச ஜாக்கெட் பாத்து இருக்கோம், தமன்னா போட்ட ஜாக்கெட்டை வேற லெவல் இருக்கிறது என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











