திருமணத்திற்கு ஓகே சொன்ன தமன்னா..மாப்பிள்ளை யார் தெரியுமா? பரபரப்பாக நடக்கும் கல்யாண வேலை!

சென்னை : நயன்தாரா, ஹன்சிகா மோத்வானியைத் தொடர்ந்து நடிகை தமன்னாவுக்கும் திருமண ஆசை வந்துள்ளது.

நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வரும் தமன்னாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தமன்னா

தமன்னா

வெண்ணையில் உருட்டிவைத்த பன்னுபோல சும்மா கும்முனு இருப்பவர் தமன்னா. இவருடைய சிறுத்த இடையைப் பார்த்து சொக்கிப்போகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் தமன்னா. தமிழில் கார்த்தி, விஜய் சேதுபதி, விஜய், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தமன்னாவிற்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இவர் நடித்து வருகிறார்.

தூக்கலான கவர்ச்சி

தூக்கலான கவர்ச்சி

கதைக்கு தேவை என்றாலும் இல்லாவிட்டாலும் தூக்கலான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் தமன்னா, பாகுபலி படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தப் படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நல்ல கதைக்களம் இருந்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் தமன்னா.

பாலிவுட்டில் பிஸி

பாலிவுட்டில் பிஸி

நடிகை தமன்னா பாலிவுட்டில் 2 படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் வெப் தொடருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. தமிழிலும் தனக்கான வாய்ப்பை மீண்டும் பெற தமன்னா முயற்சித்து வருகிறார்.

விரைவில் திருமணம்?

விரைவில் திருமணம்?

இந்நிலையில் தற்போது தமன்னா மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. விரைவில் இந்த தகவலை தமன்னா வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தமன்னா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

திருமண வதந்தி

திருமண வதந்தி

தனது திருமண வதந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள தமன்னா,"என் தொழிலதிபர் கணவரை அறிமுகப்படுத்துகிறேன்" என்று எழுதி திருமண வதந்திகள், எல்லோரும் என் வாழ்க்கையை ஸ்கிரிப்ட் செய்கிறார்கள்"என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மதிப்பு சேர்க்கும் ஒரு விஷயம். அது உங்களின் வாழ்க்கையை மிகவும் அழகாக ஆக்குகிறது. ஆனால், திருமணத்தை விட வாழ்க்கையில் நிறைய இருக்கிறது என்றும் திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X