கவர்ச்சி, ஹீரோவின் காதலி.. தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் அதுக்கு மட்டும் தான்.. தமன்னா ஓபன் டாக்!

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் 'மில்கி பியூட்டி' நடிகை தமன்னா பாட்டியா. இவர் தென்னிந்திய திரையுலகில் நிலவும் 'ஹீரோ சென்ட்ரிக்' கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சவுத்தில் இல்லையா?: தமன்னா அளித்த பேட்டியில் பாலிவுட் எனப்படும் இந்தித் திரைப்படத் துறையில் நடிகர்களுக்குத் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கதைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அங்கு நடிப்புத் திறனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அழுத்தமான கலைநயமிக்க கதாபாத்திரங்கள் ஒருபுறம், முழுமையான வணிக ரீதியான பொழுதுபோக் படங்கள் மறுபுறம் எனப் பிரிந்து கிடக்கின்றன. அங்கு நடிகைகள் தங்களுக்கு எது செட் ஆகுமோ அதைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஆனால், இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து கொண்டு போகிறவர்கள் தான் அங்கு சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்கள்.

Tamannaah Bollywood
Photo Credit:

வெறும் கவர்ச்சி: நான் தென்னிந்தியத் திரைப்படத் துறைகளில் பல வருடங்களாகப் பயணித்து இருக்கிறேன். எனது அனுபவத்தில், தென்னிந்தியாவில் எடுக்கப்படும் பெரும்பான்மையான படங்கள் முழுக்க முழுக்க ஹீரோக்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. இதனால் அங்கு பெண் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சினிமாக்களில் ஹீரோவின் காதலியாக வருவது, பாடல்களில் கவர்ச்சியாக நடனமாடுவது மட்டுமே நடிகை பயன்படுத்தப்படுகிறார்கள். அங்கு பெண்களைப் பார்க்கும் பார்வையே ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஆதிக்கப் பாணியில் தான் இருக்கிறது. இதை நான் என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்தேன்.

ஐட்டம் டான்ஸ்: மேலும், கமர்சியல் படங்களில் வரும் டான்ஸ்களை 'ஐட்டம் சாங்ஸ்' என்று நான் பார்க்கவில்லை, அது ரசிகர்களை மகிழ்விக்கும் 'பார்ட்டி சாங்ஸ்' என்றும் தமன்னா அந்தப் பேட்டி தமன்னா பேசி இருக்கிறார். நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'காவாலா' பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்துப்போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X