எல்லா கண்ணும் உங்க மேல தான்.. டைட் உடையில் க்யூட்டாக வலம் வந்த தமன்னா!
சென்னை: பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்து வெயிட்டு போட்ட நடிகை தமன்னா, சம்பளம் வந்தா போதும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டு, விட்ட மார்க்கெட்டை பிடித்துவிட்டார். தற்போது கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமன்னா விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த தமன்னா,ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பிறகு, மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து அரண்மனை 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.
காதல் கிசுகிசு: இப்படி பிஸியாக இருக்கும் தமன்னா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது. சோஷியல் மீடியாவில் பரவிய வதந்தியால் டென்ஷனான தமன்னா, நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அதை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இதையடுத்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.

அந்தரங்க காட்சியில் தமன்னா: மேலும், நடிகை தமன்னா ஜி கர்தா என்ற வெப் தொடரில் நடிகர் சுஹைல் நய்யாருடன், தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த படத்திற்கு அந்த காட்சி தேவையான ஒன்று என்பதால் தான் அந்த அந்த காட்சியில் நடித்தேன் என்றார். இதைத் தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரி 2 படத்திலும் விவகாரமான காட்சியில் நடித்திருந்தார்.

எல்லா கண்ணும் உங்க மேல தான்: அண்மை காலமாக இணையத்தில் படு கவர்ச்சியாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது, ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டில் மிகவும் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். தனது பால்மேனி மொத்தமும் தெரியும்படி அவர் உச்சகட்ட கவர்ச்சியில் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தார். அந்த சக்சஸ் மீட்டிற்கு வந்த மீடியாக்களின் கேமராக்கள் எல்லாம் தமன்னா மீது தான் இருந்தது என்று கூற வேண்டும். தமன்னாவின் இந்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











