Tamannaah: 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம்.. கடுப்பான பெற்றோர்!

சென்னை: பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பிடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகையிடம் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை பெற்றோர் நாடியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என படுபிஸியான நடிகையாக இருக்கும் தமன்னா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவலயா பாடலுக்கு ஆட்டம் போட்டு மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். அண்மையில் தமன்னா லீடு ரோலில் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

Tamannaah Sundar c

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா போட்டி போட்டு நடித்த அரண்மனை4 திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுக்கு தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் தமன்னாவுக்கு குவிந்து வருகின்றன. அரண்மனை ஐந்து படத்திலும் தமன்னாவை நடிக்க வைக்க சுந்தர் சி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது- அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமன்னா சம்பளத்தை கணிசமாக ஏற்று விட்டார் என்று கூறப்படுகிறது.

தமன்னா பற்றிய பாடம்: இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சிந்தி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த திரைப்படங்கள் பற்றியும், அவரது நடிப்பு பற்றியும் அதில் இடம் பெற்றுள்ளது

Tamannaah Sundar c

தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களின் பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். அத்துடன் பள்ளி நிர்வாகத்தையும் அவர்கள் கண்டித்துள்ளனர். ஒரு நடிகையிடம் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேள்வி கேட்டுள்ளனர்.

விஜய் வர்மாவுடன் காதல்: படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். எனக்கு விஜய் வர்மா மீது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் தான் காதல் ஏற்பட்டது. நான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததால், அவருக்காக நானும் சில கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன். நான் அவருடன் சேர்ந்து நடித்ததாலேயே அவர் மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை என கூறியிருந்தார்.

டாப் நடிகை: 2006ம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னாவிற்கு, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது அப்பாவித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த தமன்னாவிற்கு, இப்படத்திற்கு பின் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X