Tamannaah: திடீரென கவர்ச்சி காட்டுவது ஏன்? தமன்னா கொடுத்த விளக்கம்!
சென்னை: நடிகை தமன்னா பாட்டியா இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக இருக்கிறார். பான் இந்திய திரைப்படமான 'பாகுபலி' முதல் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வரை, தனது கவர்ச்சியாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அண்மையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், உணவு, உடற்பயிற்சி,திரைப்பயணம் என பல விஷயம் குறித்து மனம் திறந்த பேசி உள்ளார்.
கேள்வி: இத்தனை வேலை பளுவுக்கு இடையில் எப்படி உடற்பயிற்சியை செய்து உடலை பராமரிக்கிறீர்கள்?
நான் உடற்பயிற்சி செய்யத் தொடங்கி நீண்ட காலமாகிறது. உடற்பயிற்சி, உணவு, வேலை அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் செய்வேன். எதையும் கட்டாயமாக செய்ய மாட்டேன். எனக்கு சோர்வாக இருந்தால், சரியாகத் தூங்கவில்லை என்றால், என் உடல்நலன் தான் முக்கியம் என்பதால், நான் பயிற்சி செய்வதை விட ஓய்வு எடுப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். என் உடற்பயிற்சி முறையை எந்த வகையிலும் என்னை பாதிக்காது.
கேள்வி: பரபரப்பான படப்பிடிப்பிற்குப் பிறகு ஓய்வு எடுக்க என்ன செய்வீர்கள்?
நான் ஒரு அமைதியான இடத்திற்குச் சென்று, வெளிச்சம் மற்றும் தொழில்நுட்பம் அனைத்தையும் அணைத்துவிடுவேன். சும்மா அமைதியாக ஓய்வெடுப்பது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். நான் தியானம் செய்வதையும், கோயிலுக்கு செல்வதையும் அதிகம் விரும்புவேன். இது எனக்கு மன அமைதியைத் தருவதோடு மட்டுமல்லாமல், நல்ல அனுபவத்தையும் தரும்.

கேள்வி: உங்கள் அழகின் ரகசியம் என்ன?
நான் ஒரு பிரத்தியேகமான சரும பராமரிப்பு முறையை பின் பற்றி வருகிறேன். சிறந்த சருமத்திற்கான ரகசியம் அதுதான். இதை தினமும் செய்ய வேண்டும். சரும பராமரிப்பு என்பது உடற்பயிற்சி போன்றது, அதைத் தவறாமல் செய்தால் மட்டுமே பலனளிக்கும். நீங்கள் புதிய புதிய தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும், அது பலன் அளிக்காது. சருமத்திற்கு மிகவும் முக்கியம், நல்ல மனநலம், நல்ல உணவு, தூக்கம் பிரகாசமான சருமத்தை தரும். இப்படி ஒரு சருமத்தை எனக்கு கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி, ஆனால் அதைப் பாதுகாப்பது என் பொறுப்பு.
கேள்வி: உங்களால் மறக்க முடியாத பயண அனுபவம் என்ன, ஏன்?
காசிக்கு நான் பயணம் செய்ததை என்னால் மறக்கவே முடியாது. காசி ஆழமான ஆன்மீக நகரம், அது என்னைக் கவர்ந்துவிட்டது. நான் இதற்கு முன் எங்கு சென்றிருந்தாலும், என் பெற்றோருடன் மீண்டும் செல்ல விரும்புகிறேன். கோயில்கள் மற்றும் படித்துறைகள் வழியாக நடந்து செல்லும்போது, வரலாற்றின் பாரத்தை உணர முடியும் . காசியில் ஒரு விவரிக்க முடியாத அமைதி நிலவுகிறது.
கேள்வி: திடீரென கவர்ச்சி கட்டி நடிப்பது ஏன்?
நடிகையாக என் பயணத்தை தொடங்கிய போது, சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டதால், சவாலான பல கதாபாத்திரங்களையும், அழுத்தமான பல படங்களையும் தவறவிட்டேன் என்கிற உணர்வு ஏற்பட்டது. அதனால் தான் எனக்கு நானே, விதித்துக்கொண்ட நோ கிஸ் என்கிற கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு இப்போது கவர்ச்சியாக நடித்து வருகிறேன்.
கேள்வி: சினிமாதுறையில் நுழையும் இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
கவனமாக இருங்கள். தயாராக இருங்கள். வாய்ப்புகள் நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வரக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என் பயணத்தில், எனக்கு வந்த எதற்கும் நான் முழுமையாகத் தயாராக இருந்ததில்லை. ஆனால் தைரியமாக நுழைந்து விஷயங்களைக் கண்டுபிடிக்க எனக்குத் துணிச்சல் இருந்தது.


Click it and Unblock the Notifications











