நெற்றியில் திருநீறு.. கழுத்தில் மாலை.. தமன்னாவின் திடீர் ஆன்மீக பயணம்!
சென்னை: விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகை தமன்னா விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மூலம் மீண்டும் தமன்னாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்த தமன்னா, காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பி விட்டார். ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றிக்கு தமன்னாவின் ஆட்டமும் ஒரு காரணம் என்று சொல்லும் அளவிற்கு, கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போட்டிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, அரண்மனை 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.

காதலிக்கிறேன்: இப்படி பிஸியாக இருக்கும் தமன்னா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது. சோஷியல் மீடியாவில் பரவிய வதந்தியால் டென்ஷனான தமன்னா, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். அதில், நான் அவருடன் சேர்ந்து நடித்தாலேயே அவர் மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்று விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.

பக்தி முற்றிவிட்டது: தமன்னா எப்போது திருமண செய்தியை அறிவிப்பார் என்று அனைவரும் ஆவளோடு காத்திருக்கும் நிலையில், ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு சிவனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வது, மற்றும் கழுத்தில் மாலையோடு வழிபாடு நடத்திய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள் அம்மணிக்கு பக்தி முத்திவிட்டது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications











