Year ender 2024: 2024 எப்படி இருந்துச்சு.. அட்டகாசமா அன்பா இருந்துச்சு.. தமன்னா வெளியிட்ட வீடியோ!
மும்பை: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவ்வப்போது படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். இந்த 2024 ஆம் ஆண்டில் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
இதே போல பாலிவுட்டிலும் ஆக்ரி சச், சிக்கந்தர் கா முகாதர் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை தமன்னாவிற்கு பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக ஆஜ் கி ராத் பாடலில் இவரது ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது. இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகவும் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் தமன்னாவின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை தமன்னா: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு தமன்னாவிற்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் தமிழ், இந்தி மொழிகளில் படங்கள் ரிலீசாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை தமன்னா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு இந்த 2024ம் ஆண்டில் மட்டுமே 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தமிழில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் ரிலீசாகி அவருக்கு மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
அரண்மனை 4 படம்: அரண்மனை 4 படத்தில் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டதை தவிர்த்து மிகவும் ஹோம்லியான கேரக்டரில் தமன்னா நடித்திருந்தார். தன்னுடைய குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் அம்மாவின் பரிதவிப்பை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து காவாலா பாட்டிற்கு ஆட்டம் போட்டிருந்த தமன்னா. அடுத்ததாக ஜெயிலர் 2 படத்திலும் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் இந்தப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான 2024 ஆண்டு: இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு மகிழ்ச்சியான தருணங்களை தனக்கு கொடுத்துள்ளதாக தமன்னா வீடியோ மூலம் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இதில் அவர் அடுத்தடுத்து நடித்த ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வுகள், தன்னுடைய குடும்பத்தினருடன் செலவழித்த சிறப்பான தருணங்கள், பார்ட்டி கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் இணைத்துள்ளார். மொத்தத்தில் இந்த 2024ம் ஆண்டு அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துள்ளதாக கூறலாம்.
அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை: அவரது அடுத்தடுத்த கமிட்மெண்ட்களால் இந்த ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் மாறியுள்ளார். கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 111 கோடிகளாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 120 கோடிகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய திரைப்பட பங்களிப்பை தொடர்ந்து வருவதுடன் ரியல் எஸ்டேட்டிலும் கணிசமான முதலீடுகளை செய்துள்ளார். மும்பையின் வெர்சோவாவில் பேவியூ அபார்ட்மெண்டையும் அவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். இவரது கார் கலெக்ஷன்களும் சிறப்பாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications











