Tamannaah: வீக் எண்ட் வைப் செய்த தமன்னா.. அட சேட்டையை பாருங்க!

மும்பை: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழில் கடந்த ஆண்டில் நடிகர் ரஜினியுடன் இணைந்து கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகையாகவே தமன்னா நடித்திருந்த சூழலில் காவாலா பாடலுக்கு இவர் போட்டிருந்த ஆட்டம் சர்வதேச அளவில் இவரது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமன்னா, சுந்தர் சி, ராஷி கண்ணா இணைந்து நடித்து வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சுந்தர்சியுடன் தமன்னா புதியதாக மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tamannaah Sundar C Instagram tamil cinema 4

நடிகை தமன்னா: நடிகை தமன்னா தமிழில் கேடி படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வந்த இவர், முன்னணி நடிகர்களான கார்த்தி, சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போது மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா இணைந்து நடித்திருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்திருந்தது.

காவாலா பாடலில் மாஸ்: ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார் தமன்னா. இந்த பாடலில் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு தமன்னா மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டினார். இந்த பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பாடலாக அமைந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் சி, ராஷி கண்ணா ஆகியோருடன் இணைந்து தமன்னா நடிப்பில் வெளியானது அரண்மனை 4. இந்த படம் தமன்னாவின் நடிப்பிற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் சுந்தர் சி யின் சகோதரியாக தமன்னா நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

சிறப்பாக அமைந்த அரண்மனை 4 படம்: படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் தமன்னா நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு தமன்னாவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுந்தர் சியுடன் இணைந்து தமன்னா மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சுந்தர் சியே அந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக நடித்து வரும் தமன்னா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தமன்னா வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு: வீக் எண்ட் வைப்பாக இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காணப்படுகிறது. வீடியோவில் தன்னுடைய பிட்னஸ் சீக்ரெட்டை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா. தனக்கு தானே கிரீடம், மீசை, அழுகை உள்ளிட்டவற்றையும் இணைத்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்களையும் அள்ளி வருகிறது. தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோஷுட் புகைப்படங்கள், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், அறிவிப்புகள் என வெளியிட்டுவரும் தமன்னாவை இன்ஸ்டாகிராமில் 25.5 மில்லியர் பேர் பாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X