ஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை!

மும்பை : ஊரடங்கில் அனைவரும் வீட்டில் அடைந்து இருக்கும் வேலையில் நடிகை தமன்னா ஊர் சுற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியில் பயணிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் நடிகை தமன்னா பேக்கும் கையுமாக மலை ஏறிச்சென்று அதைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கடுமையான விதிமுறைகளும்

கடுமையான விதிமுறைகளும்

இந்தியாவில் கொரானா நோய் தொற்று அச்சம் காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனை தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளும் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் சுற்ற கூடாது என பல்வேறு கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

விமல், சூரி கொடைக்கானலில்

விமல், சூரி கொடைக்கானலில்

இந்நிலையில் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் வீடியோக்களின் மூலமும் புகைப்படங்களின் மூலமும் வீட்டில் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விதமான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வந்தனர். இப்படியிருக்கையில் நடிகர் விமல் மற்றும் சூரி சமீபத்தில் கொடைக்கானலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி மீன் பிடிக்கச் சென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மலையேற்றம் சென்றுள்ளார்

மலையேற்றம் சென்றுள்ளார்

இவ்வாறு இருக்கையில் நடிகை தமன்னாவும் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். லாக்டவுன் சமயத்தில் மும்பையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் தமன்னா மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்திலுள்ள அசங்கான் மகுலி காட்டில் மலையேற்றம் சென்றுள்ளார்.

முதுகில் ஒரு பையுடன்

முதுகில் ஒரு பையுடன்

முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு சிரித்த முகத்துடன் காட்டுக்குள் நடந்து செல்லும் பாதையில் அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் "இயற்கையில் தொலைந்து போங்கள்.. உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்" என்ற சுவாரஸ்யமான தலைப்பை பதிவிட்டு தன் ரசிகர்களை ஆச்சரிய படுத்தியிருந்தார்.

யார் அனுமதி வழங்கியது

யார் அனுமதி வழங்கியது

பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டும் நிலையில் ஒரு சிலர் நீங்கள் எப்படி ஊரடங்கு சமயத்தில் இப்படி பொறுப்பில்லாமல் அரசாங்கத்தின் விதிகளை மீறி மலையில் சுற்றித் திரிய உங்களுக்கு யார் அனுமதியை வழங்கியது என கேள்விகளை அடுக்கி வருகின்றனர். இதற்கிடையில் இந்த புகைப்படம் இப்போது எடுத்ததா இல்லை லாக்டவுனுக்கு முன் எடுக்கப்பட்டு தற்பொழுது பகிர்ந்துள்ளாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X