பார்பி கேர்ள் போல ஜொலிக்கும் நடிகை தமன்னா!
சென்னை : தமிழில் அஜித் குமார் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை தமன்னா
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அதே சமயம் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்
F2 மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக F3 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க பார்பி டால் மாதிரி வடித்து வைத்த மெழுகு சிலையாய் அசையாமல் நிற்கும் தமன்னாவின் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

இறுதிவரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல்
வெங்கடேஷ்,வருண் தேஜ், தமன்னா ஆகியோரின் நடிப்பில் தெலுங்கில் வெளியான F2 திரைப்படம் கலகலப்பான காமெடி கதை களத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கலகலப்பான நிகழ்வுகளை கொண்ட படமாக வெளியாகி வெற்றி பெற்றது

வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா
F2 வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக F3 பரபரப்பாக தயாராகி கொண்டுள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வர படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் சர்ப்ரைஸாக விசிட் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். முந்தைய பாகத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது

மாறாக படுதோல்வியை சந்தித்தது
தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்சன் படத்தில் நடித்திருந்தார் முழுக்க முழுக்க ஆக்சன் கட்சிகளால் உருவாக்கப்பட்ட ஆக்சன் படத்தில் தமன்னா பல சண்டைக் காட்சிகளில் நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார் ஆனால் திரைப்படம் என்னவோ எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை மாறாக படுதோல்வியை சந்தித்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

வடித்து வைத்த மெழுகு சிலை போல
சிறுத்தை சிவா,அஜித் குமார் கூட்டணியில் வரிசையாக வெளியான திரைப்படங்களில் ஒன்றான வேதாளம் இப்பொழுது தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் வடித்து வைத்த மெழுகு சிலை போல அச்சு அசலா ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கொண்டு பார்ப்பதற்கும் பார்பி கேர்ள் போல இருக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications