Tamannaah: ஓடிடி, ரீல்சை தாண்டி ரசிகர்களை கவர்வது மிகப்பெரிய சவால்.. தமன்னா ஓபன்!

சென்னை: நடிகை தமன்னா கடந்த 2005ம் ஆண்டில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கி தொடர்ந்து தற்போது வரை பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தமன்னா காணப்படுகிறார். இவரது சம்பளம் கோடிகளில் உள்ள நிலையில் சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

வழக்கமான தன்னுடைய கவர்ச்சி கலாட்டாக்களை செய்யாமல் இந்த படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தமன்னா. இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும் தொடர்ந்து பேயாகவும் மிரட்டி இருந்தார். படத்தில் சுந்தர் சியின் தங்கையாக தமன்னா நடித்திருந்தார். முன்னதாக ரஜினியுடன் தமன்னா ஜெயிலர் படத்திலும் கேமியோ கேரக்டரில் நடித்து மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தார்.

Tamannaah Aranmanai 4 tamil cinema 4

நடிகை தமன்னா: நடிகை தமன்னா கடந்த 2005ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் தமன்னா, வெப் தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கட்டிப்போட்டு வரும் தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா, தனது சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் மனநிலை குறித்து பேசி உள்ளார்.

நடிகைகளின் சவால்: ரசிகர்களை திரைப்படங்களை பார்க்க வைப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார். சினிமாவில் மட்டுமே படங்களை ரசிகர்கள் பார்த்துவந்த காலம் மாறிவிட்டது, தற்போது ஓடிடியிலும் ரசிகர்கள் அதிகமான படங்களை பார்த்து வருகின்றனர். மேலும் 15 நொடி ரீல்சைகூட பார்த்து பொழுதை கழிக்கிறார்கள் என்று கூறியுள்ள தமன்னா, அவர்களை கவர்ந்து திரையரங்கிற்கு வரவைப்பது மிகப்பெரிய சவாலா உள்ளதாக கூறியுள்ளார். ரீல்ஸ்கள் நடிகைகளுக்கு மிகப்பெரிய போட்டியாக அமைந்துள்ளதாகவும் தமன்னா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சாதித்த திருப்தி: சிறு வயதிலேயே நடிப்பில் ஆர்வத்துடன் இருந்த தனக்கு சினிமாவில் நடிக்கத் துவங்கியவுடன் அதிகமான சவால்கள் காத்திருந்ததாகவும் தமன்னா கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் தான் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் இதற்காக 100 சதவிகிதம் உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது முன்னணி நடிகையாக சாதித்த திருப்தி தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் தமன்னா நடிப்பில் தமிழில் வெளியான அரண்மனை 4 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

அரண்மனை 4 படம்: இந்த படத்தில் சுந்தர் சியின் சகோதரியாக நடித்துள்ள தமன்னா, தன்னுடைய குழந்தைகளை காக்கும் வகையில் அம்மாவாகவும் தொடர்ந்து பேயாகவும் மாறி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்திலும் தமன்னாவின் கேமியோ கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்தில் நடிகையாகவே நடித்து காவாலா என்ற பாடலுக்கு சிறப்பான ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா. இந்த படத்தில் தமன்னாவின் டான்ஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X