வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது.. தமன்னா காட்டம்!

மும்பை : நடிகை தமன்னா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளவர்.

தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட்டாகி நடித்துவரும் தமன்னா, வெப் தொடர்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தமன்னா தற்போது மனம் திறந்துள்ளார்.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா

நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட்களை கொடுத்துள்ளவர். கேடி படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா, தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா, தற்போது பாலிவுட்டில் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த தமிழ் படங்கள்

அடுத்தடுத்த தமிழ் படங்கள்

மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்திலும் கமிட்டாகி நடித்துவருகிறார் தமன்னா. இந்தப் படத்தை தொடர்ந்து அரண்மனை 4 படத்திலும் சுந்தர் சிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணாவும் மற்றொரு நாயகியாக நடிக்கவுள்ளார். பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் தமன்னா, சமீப காலங்களில் பொதுவெளிகளில் அதிகமான கவர்ச்சியுடன் வலம் வருகிறார்.

விஜய் வர்மாவுடன் டேட்டிங்?

விஜய் வர்மாவுடன் டேட்டிங்?

சமூக வலைதளங்களிலும் அதிகமான கவர்ச்சியுடன் புகைப்படங்களை பதிவிட்டுவரும் தமன்னா, சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிற்கு லிப்லாக் கொடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதையடுத்து இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவருமே வாய் திறக்காமல் மௌனம் சாதித்தனர்.

வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது

வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் தமன்னாவிடம் விஜய் வர்மாவுடனான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமன்னா, நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். இதையடுத்து சில வதந்திகள் பரவியுள்ளது. இதற்கெல்லாம் விளக்கம் கொடுப்பது தேவையில்லாதது, இதைப்பற்றி வேறெதுவும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். விஜய் வர்மாவுடனான உறவு குறித்து அவர் நேரடியாக எதுவும் கூறாததால் ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

தமன்னாவின் இந்த பேட்டியால் இணையதளத்தில் ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். அது தமன்னாவின் தனிப்பட்ட விஷயம், அதைகுறித்து அவர் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு சாராரும், லிப்லாக் குறித்தும் விஜய் வர்மாவுடனான உறவு குறித்து எதுவும் கூறாமல் தமன்னா மழுப்பியுள்ளதாக மறுசாராரும் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் விஜய் வர்மா குறித்து தொடர்ந்து மௌனம் சாதிக்காமல், சில விஷயங்களையாவது தமன்னா கூறினாரே என்று ரசிகர்கள் தங்களை ஆசவாசப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X