மீட் பண்ணவா... சாட் பண்ணவா... இது வேற லெவல் அழகு... வைரலாகும் நடிகை தமன்னாவின் ஹாட் ஸ்டில்ஸ்
சென்னை: நடிகை தமன்னாவின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, பையா, வீரம், பாகுபலி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இப்போது, த நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த த்ரில்லர் தொடரை ராம் சுப்ரமணியன் இயக்குகிறார்.

இந்தி, தெலுங்கு
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
போட்டோ ஷூட்
இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூபோட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப் புகைப்படங்களை, தனது சமூக வலைத்தளப் பக்கமான, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் தமன்னா.
லட்சக்கணக்கில் லைக்ஸ்
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சிலர் ஜாலியான கமென்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.
பூக்களின் தேவதை
ஒரு ரசிகர், உங்களின் இந்தப் போஸ் பார்த்து மோனலிசாவே பொறாமைப்படுவார் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், பூக்களின் தேவதையே என்று வர்ணித்துள்ளார். மற்றொருவர் மீட் பண்ணவா, சாட் பண்ணவா என்று ஜாலியாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











