பாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்
சென்னை: பாகுபலி தி பிகினிங் படத்தில் கத்தி வீசி சண்டை போட்ட நடிகை தமன்னா சுந்தர் சி இயக்கும் ஆக்ஷன் படத்தில் பெண் கமாண்டோவாக நடித்திருக்கிறார். படம் வெளியான உடன் நிச்சயம் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை தமன்னா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னா, சில படங்களில் கவர்ச்சி காட்டி இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்ட தாகத்தான் இருக்கும். அவர் பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலேயே நடித்திருந்தார்.

பாகுபலியில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதற்குப் பின்னர் வந்த படங்கள் எதுவுமே இவருக்கு சரியானதாக இல்லை. கேஜிஎப் படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட்டார் சம்பளம் செம வெயிட் என்பதால் ஒத்துக்கொண்டார். தர்மதுரை திரைப்படத்தில் அவரது நடிப்பு திறமையை பார்த்து அனைவரும் வியந்தனர். தொடர்ந்து இதுபோல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
தற்போது டோலிவுட்டில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகை தமன்னா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பெயர் ஆக்ஷன். இந்த திரைப்படத்தின் கதைக்கரு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கூடங்களில் நடக்கும் சம்பவத்தை வைத்து திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் தான் இருந்தது. இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். இந்த திரைப்படம் வெளியானதும் இந்த கதாபாத்திரம் பேசப்படும். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான முறையான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார் என்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். கிட்டத்தட்ட 70 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடந்துவருகின்றன என்றும் சுந்தர் சி கூறியுள்ளார். சுந்தர் சி படங்கள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது ஆக்சனில் எப்படி என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











