Actress Tamannaah: அட்டை படத்திற்கு க்யூட் போஸ்..ரசிகர்களுக்கு கிக் ஏற்றிய தமன்னா!

சென்னை: நடிகை தமன்னா பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார்.

30 வயதை கடந்த நிலையில் தமன்னா எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Actress Tamannaah takes photoshoot for Global spa and the pictures makes fans interesting

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை தமன்னா: நடிகை தமன்னா பல ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் இந்தியிலும் நடித்து வருகிறார். தமிழில் கல்லூரி படம் மூலம் என்ட்ரி கொடுத்த தமன்னா தொடர்ந்து கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னணி நடிகை என்ற இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார். பாலிவுட்டில் படங்களில் கவனம் செலுத்தி வருவதால் தென்னிந்திய மொழிப் படங்களில் தமன்னாவை பார்க்க முடியவில்லை.

ஜெயிலர் படத்தில் தமன்னா: பாலிவுட்டில் படங்களில் நடித்துவரும் தமன்னாவிற்கு தென்னிந்திய மொழிகளில் அதிகமாக வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் தமன்னா. சிறிய கேரக்டர் என்றாலும் படத்தில் நடிகையாக நடித்திருந்த தமன்னாவின் கேரக்டர் மற்றும் காவாலா பாடலில் தமன்னாவின் ஆட்டம் ஆகியவை மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. சர்வதேச அளவில் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்திருந்தனர்.

சுந்தர் சியுடன் அரண்மனை 4 படம்: அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்திலும் தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில் சுந்தர் சியே ஹீரோவாக நடித்துள்ள நிலையில் படம் ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலரை தொடர்ந்து தமிழில் அதிகமான கவனத்தையும் வாய்ப்புகளையும் தமன்னா பெற்று வருகிறார். பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திவரும் தமன்னா அங்கு பிரபல ஹீரோ விஜய் வர்மாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

விஜய் வர்மாவுடன் காதல்: இந்நிலையில் இந்தத் தகவலை தமன்னாவும் உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புகழ்பெற்ற குளோபல் ஸ்பா பத்திரிகையின் அட்டை படத்தில் தமன்னாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதற்கான போட்டோஷுட் எடுக்கப்பட்ட நிலையில் இந்தப் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. தமன்னாவிற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பான் இந்தியா ஸ்டார்: நடிகை தமன்னா தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்ற தமன்னா, பிரபாசுடன் பாகுபலி படத்தில் நடித்ததன்மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். சமீபத்தில் தமன்னா நடித்திருந்த வெப் தொடரில் படுக்கையறை காட்சிகளிலும் தாராளம் காட்டியிருந்தார் தமன்னா. இதனால் அதிகமாக பிரபலமடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X