Actress Tamannaah: சமையல் கிளாஸ் எடுத்த தமன்னா.. Cheat Day இல்லையாம்.. Chaat Day வாம்!
சென்னை: நடிகை தமன்னா பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் இவர் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்களும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் போட்டோஷூட் புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல வீடியோக்களையும் தமன்னா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது தன்னுடைய உணவு குறித்த வீடியோவை தமன்னா பதிவிட்டுள்ளது ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இவரது அடுத்தடுத்த பதிவுகளால் இவரை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி டிரிப் செல்லும் தமன்னா அந்த வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

நடிகை தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா என்ற பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.
ரசிகர்களை கவர்ந்த காவாலா பாடல்: மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த பாடலுக்கு அதிகமானோர் ஆட்டம் போட்டிருந்தனர். துவக்கத்தில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த தமன்னா, கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டத் துவங்கினார். இவரது கவர்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டிய நிலையில் தொடர்ந்து இவர் எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களிலும் இந்த கவர்ச்சி அதீதமாக காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் தன்னுடைய அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தமன்னா.
தமன்னாவின் சமையல் வீடியோ: அந்த வகையில் தற்போது அவர் ஒரு சமையல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தான் சாப்பிடும் உணவு குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதில் தான் ஸ்வீட் பொட்டேட்டோ கட்லெட் சாப்பிடுவதை அவர் காண்பித்துள்ளார். அதில் மேலும் என்னென்ன விஷயங்களை தான் சேர்க்கிறேன் என்றும் அந்த விஷயங்கள் எப்படி தன்னுடைய க்ளோயிங் ஸ்கின்னுக்கு உதவுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சக்கரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட கட்லெட்டை அவர் மேலே எதையெல்லாம் சேர்த்து சாப்பிடுகிறார் என்பதை வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் செய்த தமன்னா: அந்த வகையில் சக்கரை வள்ளி கிழங்கிற்கு மேலே துருவிய வெள்ளரிக்காயை சேர்க்கிறார். அது தன்னுடைய வயிற்றுக்கும் ஸ்கின்னிற்கும் மிகவும் சிறப்பாக உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதன் மேலே தயிரை சேர்க்கிறார். இதை அடுத்து புதினா சட்னியையும் சேர்க்கிறார். புதினே என்று சொல்வதா அல்லது புதினா என்று சொல்வதா என்று அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. அதன் மேலே மிக்சரையும் சேர்த்து விட்டு தொடர்ந்து சாட் மசாலா சேர்ப்பதை மறந்து விட்டதாக கூறி அதையும் சேர்க்கிறார். எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து சாப்பிடுகிறார். இந்த உணவை காட்டிலும் இந்த உணவை தயாரிப்பதற்காக அவர் செய்யும் முகபாவனைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











