Tamannah Dance: தமன்னாவை அலேக்காக தூக்கி.. அந்த இடத்தில் கை வைத்து.. செம டான்ஸ்!

சென்னை: நடிகை தமன்னா பாட்டியா ஆடிய கவர்ச்சி நடனம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, தனது ஸ்டைலான நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நீல நிற உடையில் மேடையேறிய தமன்னா, அரண்மனை 4 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "அச்சச்சோ அச்சச்சோ" என்ற பாடலுக்கு தாறுமாறான கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது ஒவ்வொரு அசைவும், எக்ஸ்ப்ரஷன்களும் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்துள்ளது. மேடையில் தமன்னாவின் ஆட்டம் முடிந்ததும், அந்த நடனத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, மிகக் குறுகிய நேரத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட தளங்களில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்று வருகிறது.

tamannah bhatia dance
Photo Credit:

தமன்னா டான்ஸ்: ரசிகர்கள் பலரும், "தமன்னாவின் ஸ்டைல் வேற லெவல்", "புத்தாண்டுக்கு சரியான ட்ரீட்" என புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அந்த நடனத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் ஆக பகிர்ந்து வருகின்றனர். நடிகை தமன்னா நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அந்த பாடல் மூலம் டாக் அப்தி ஸ்டாராக மாறினார் தமன்னா.

tamannah bhatia dance
Photo Credit:

கவர்ச்சி ஆட்டம்: அந்த வகையில் புத்தாண்டு மேடை நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் ஒருமுறை தனது ஸ்டார் பவரை நிரூபித்துள்ளார். சமீப காலமாக அவரது மேடை தோற்றங்களும், டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்களும் இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. மொத்தத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம் சேர்க்கும் வகையில், தமன்னாவின் இந்த கவர்ச்சி நடனம் தற்போது இணையத்தை கலக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக தமன்னாவின் இடுப்பில் கை வைத்து அவரை அப்படியே தூக்கி உள்ளனர். இதைப்பார்த்த ஃபேன்ஸ் கொடுத்துவைத்த டான்சர்ஸ் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X