பாலிவுட்ல ஒருகை பார்த்திரனும்.. மும்பையில் புதிய வீடு வாங்கிய நடிகை.. விலைய கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
மும்பை: நடிகை தமன்னா புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
நடிகை தமன்னா தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஏராமான படங்களில் நடித்துவிட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா இந்தி மொழியிலும் நடித்து வருகிறார்.
ஆனால் இந்தியில் அவருக்கு எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னா மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

14வது மாடியில் வீடு
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் ஜூஹு வெர்சோவா இணைப்பு சாலையில் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளார் தமன்னா. பேவியூ என்ற கட்டிடத்தின் 14 வது மாடியில் அமைந்துள்ளது தமன்னாவின் வீடு.

சதுர அடி 80 ஆயிரம்
வீட்டின் ஒரு சதுர அடி 80,778 ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு பிளாட் வாங்கி உள்ளார். இந்த வீட்டின் மொத்த சதுர அடி 2,055 என கூறப்படுகிறது.

16 கோடியே 60 லட்சம்
வீட்டை ரிஜிஸ்டர் செய்ய 99.60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டூட்டியாக செலுத்தி உள்ளார். மொத்தமாக வீட்டிற்கு 16 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார் தமன்னா.

2 கார் பார்க்கிங்
இந்த குடியிருப்பு 22 அடுக்குகளை கொண்டு அழகாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தமன்னாவுக்கு இரண்டு கார் பார்க்கிங் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்படி என்ன இருக்கிறது?
ஆனால் இந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள வீடுகள் சதுர அடி 30000 முதல் 40000 வரை தான் விலை போகிறதாம். இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய அந்த வீட்டில் அப்படி என்ன இருக்கிறது என யோசிக்க தொடங்கிவிட்டனர் ரசிக பெருமக்கள்.


Click it and Unblock the Notifications











