விதவிதமான போஸ்.. சிவப்பு நிற தீமில் அசத்திய தமன்னா!
சென்னை : தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.
தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது பாலிவுட்டிலும் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

நடிகை தமன்னா
பாலிவுட்டில்தான் தமன்னாவின் என்ட்ரி அமைந்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகிலும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல், இந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. அஜித்தின் வீரம் படத்தில்தான் இவரை இறுதியாக பார்க்க முடிந்தது.

ரஜினியுடன் இணைந்த தமன்னா
பிரபாசுடன் இணைந்து தமன்னா நடித்திருந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் தமன்னாவிற்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுத் தந்தன. தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருந்தார். விஷாலுடன் இவர் நடித்த படம் ப்ளாப் ஆன நிலையில், தற்போது ரஜினியின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார் தமன்னா.

தமன்னா கேரக்டர்
இதுகுறித்து போஸ்டருடன் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ள நிலையில், படத்தில் தமன்னாவின் கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறர் தமன்னா. தமிழில் வேதாளம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது.

சிரஞ்சீவியுடன் தமன்னா
படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாகியுள்ளார் தமன்னா. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டாகியுள்ளதாக தமன்னா தற்போது மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சையில் தமன்னா
அடுத்தடுத்த போட்டோஷுட்களையும் நடத்திவரும் தமன்னா, அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களில் சிலுவை சிம்பள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தினர்.

சிவப்பு நிற தீமில் புகைப்படங்கள்
இந்நிலையில் சிவப்பு நிற தீமில் இவர் தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விதவிதமான அவுட்பிட்டில் இவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். வித்தியாசமான பின்புலங்களில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











