நடிகை ஜமுனா மகளிடம் வரதட்சணை கேட்டு சித்திரவதை: மாமனார்-மாமியார் கைது

By Sudha

Jamuna
சென்னை: பழம் பெரும் நடிகை ஜமுனாவின் மகளை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த மாமனார் மாமியார் கைது செய்யப்பட்டனர். கணவர் தப்பி
ஓடிவிட்டார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் போன்ற அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர் ஜமுனா ராணி.

இவரது மகள் பெயர் ஸ்ரவந்தி. கடந்த 2007-ம் ஆண்டுதான் ஸரவந்திக்கும் ஆந்திராவின் பிரபல கட்டட காண்ட்ராக்டர் ராகுல் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து, பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின்போது ஜமுனா தன் மகளுக்கு வரதட்சணையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ரூ.4.75 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போன்றவற்றைக் கொடுத்துள்ளார்.

அப்போதே ஸ்ரவந்தியின் மாமனார் மதுசூதன்ரெட்டி, மாமியார் வசந்தா இருவரும், குறைந்தது ரூ.10 லட்சமாவது ரொக்கமாகத் தரவேண்டும் என ஜமுனாவை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இருப்பது அவ்வளவுதான் என்று கூறிவிட்டாராம் ஜமுனா. இந்தக் கோபத்தில் ஸரவந்தியை மிகவும் சித்திரவதை செய்துள்ளனர் ராகுல் ரெட்டி குடும்பத்தினர்.

இதுபற்றி கேள்விப்பட்ட ஜமுனா, குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஸரவந்தியை சமாதானம் செய்துள்ளார்.

இதற்கிடையே ஜமுனா வரதட்சணையாகப் போட்ட ரூ 30 லட்சம் பெறுமானமுள்ள நகைகளில் பெருமளவை விற்றுச் செலவழித்துவிட்டாராம் ராகுல் ரெட்டி. குழந்தை பிறந்த பிறகு ஸ்ரவந்தியை மேலும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜமுனாவின் பங்களாவை எழுதித் தரும்படி கேட்டு ஸ்ரவந்தியை சித்திரவதை செய்துள்ளார் ராகுல் ரெட்டி.

இனிமேலும் தாங்க முடியாது என்ற சூழலில் ராகுல் ரெட்டி வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரவந்தி, அம்மா ஜமுனாவிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற ஜமுனா, ராகுல் ரெட்டி குடும்பம் மீது புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்துமாமனார்-மாமியாரை கைது செய்தனர். விஷயம் கேள்விப்பட்டதும் கணவர் ராகுல் ரெட்டி தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து நடிகை ஜமுனா கூறுகையில், "என்னிடம் உள்ள சொத்துக்களைப் பறிப்பதுதான் ராகுல் ரெட்டியின் நோக்கமாக இருந்துள்ளது. அதற்காகத்தான் என் மகளைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றியுள்ளார்.

எப்படியோ என் மகள் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று லட்ச லட்சமாக செலவழித்தேன். ஆனாலும் அவர்களுக்கு பணவெறி தீரவில்லை. பண ஆசையில் என் மகளை அவர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். போதும் அவள் குடும்பம் நடத்தியது. இனி என்னுடனே இருக்கட்டும். ராகுல் ரெட்டியையும் கைது செய்ய வேண்டும்...." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X