தினமும் டார்ச்சர்.. எனக்கு உதவி செய்யுங்கள்.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட விஷால் பட நடிகை.. என்ன ஆச்சு?

மும்பை: பாலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்த தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். அப்படத்துக்கு பிறகு கோலிவுட்டில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்போது பாலிவுட்டிலும் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர்; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு டாப் 10 இடத்துக்குள் வந்தவர் தனுஸ்ரீ தத்தா. அந்தப் போட்டியின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த அவருக்கு ஹிந்தியில் திரைத்துறை கதவுகள் திறந்தன. அதன்படி Aashiq Banaya Aapne என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்தார் அவர். அதில் எக்கச்சக்க கிளாமரை காட்டியிருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்: அந்தப் பாடலால் மேற்கொண்டு பிரபலமான அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் வீரபத்ரா, சாக்லே: டீப் சீக்ரெட்ஸ், பாகம் பாக், ரிஸ்க், குட் பாய் பேட் பாய், ஸ்பீட், ராமா தி சேவியர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் தமிழிலும் அறிமுகமானார் தனுஸ்ரீ.

Actress Tanushree Dutta has posted a video of herself crying
Photo Credit:

தீராத விளையாட்டு பிள்ளை: கடந்த 2010ஆம் ஆண்டு திரு இயக்கத்தில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில்தான் அவர் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டடித்தாலும்; இவர் தவிர்த்து படத்தின் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தார்கள். அதன் காரணமாக தனுஸ்ரீக்கு மட்டுமே அந்த வெற்றி போய் சேரவில்லை. அதேசமயம் தமிழிலும் அப்படத்துக்கு பிறகு வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை. அதனால் மீண்டும் ஹிந்திக்கு சென்றார்.

ஒதுங்கிய தனுஸ்ரீ: ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துவிட்டு; வாய்ப்புகள் வற்றி போனதால் டோட்டலாகவே சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது; நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இப்போது அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தனுஸ்ரீ தத்தாவின் வீடியோ: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "2020ஆம் ஆண்டு முதல் எனது வீட்டுக்கு மேலேயும், கதவுக்கு வெளியேயும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நான் வசிக்கும் பில்டிங் மேனேஜ்மென்ட்டிடம் புகார் அளித்து புகார் அளித்து சோர்ந்து போய்விட்டேன். ஒருகட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுப்பதையும் விட்டுவிட்டேன். இப்போது அந்த சத்தங்களுடன்தான் நான் வாழ்கிறேன்.

ஐந்து வருடங்களாக: இன்று நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். கடந்த ஐந்து வருடங்களாகவே தொடர்ச்சியான மன அழுத்தம் இருக்கிறது. தொடர் மன அழுத்தம் காரணமாக Chronic fatigue syndrome எனக்கு வந்திருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். அவார் இந்த வீடியோவில் பேசும்போதே கதறி அழுதபடி இருக்கிறார். மேலும் இன்னொரு வீடியோவில், 'நான் ரொம்பவே நோய்வாய்ப்பட்டும், சோர்வாகவும் இருக்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்களோ அய்யோ பாவம் சீக்கிரம் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X