ஸ்விம்மிங், யோகா, சைக்கிளிங்... மீ டூ தனுஶ்ரீ மீண்டும் ரெடி

By

மும்பை: இந்தி நடிகர் நானா படேகர் மீது, மீ டு புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார்.

தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.

Actress Tanushree Dutta Ready For A Comeback In Bollywood

இந்த மீ டூ புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர்.

இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.

இதை எதிர்த்து மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா.

இந்நிலையில் மீண்டும் நடிப்பதற்கு அவருக்கு அழைப்புகள் வந்தன. இதனால் தினமும் ஸ்விம்மிங், சைக்கிளிங் செய்துவருகிறார். இதன் மூலம் உடல் எடையை குறைத்து ஃபிட் ஆகியுள்ளார். யோகா, தியானம், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சென்று வருகிறாராம்.

சினிமாவில் மீண்டும் நடிப்பதற்குத்தானா இது? என்று கேட்டால், இதையெல்லாம் செய்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அதுபற்றி யூகித்துக்கொண்டே இருப்போம். உண்மையில் என்ன நடக்கும் என்று தெரியும்போது, அது ஆச்சரியத்தை அளிக்கட்டும் என்கிறார் தத்துவமாக.

ஆனால், பெரிய நிறுவனம் ஒன்று வெப் சீரிஸில் நடிக்கவும் சில படங்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதனால்தான் இதையெல்லாம் அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X