சேலை கட்டிய செங்காந்தள்... மாயோன் பிரஸ்மீட்டில் மனதை கொள்ளை கொண்ட தான்யா!

சென்னை : நடிகை தான்யா ரவிச்சந்திரன் கோலிவுட்டில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.

Recommended Video

MAAYON MOVIE Teaser Launch | Nakkeeran Gopal Speech, SibiSathyaraj

தற்போது சிபிராஜுடன் இணைந்து மாயோன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் பிரஸ்மீட்டில் அழகான சேலையில் அனைவரையும் கவர்ந்தார் தான்யா.

நடிகை தன்யா ரவிச்சந்திரன்

நடிகை தன்யா ரவிச்சந்திரன்

தமிழில் கடந்த 2016ல் வெளியான பலே வெள்ளைய தேவா படத்தின்மூலம் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். தொடர்ந்து அருள்நிதியுடன் பிருந்தாவனம் மற்றும் விஜய் சேதுபதியுடன் கருப்பன் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

மாயோன் படத்தில் தன்யா

மாயோன் படத்தில் தன்யா

இந்நிலையில் தற்போது சிபிராஜுடன் இணைந்து மாயோன் என்ற படத்தில் நடித்துள்ளார் தன்யா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. புதையல் நிறைந்த கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மர்மங்களை ஆராயும் கதாநாயகன் என்று சிறப்பான கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது.

பேன்டசி த்ரில்லர் படம்

பேன்டசி த்ரில்லர் படம்

கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள பேன்டசி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. டீசர் காட்சிகள் மிரட்டலாக வெளிவந்துள்ளது.

அமானுஷ்யம் நிறைந்த கோயில்

அமானுஷ்யம் நிறைந்த கோயில்

டீசரின் இறுதியில் இந்தக் கோயில்ல கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யம் இருக்குது தம்பி என்று முடிந்துள்ளது. இதன்மூலம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். படத்தின் திரைக்கதையையும் இவரே எழுதியுள்ளார்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

படத்தின் மற்றொரு பலமாக படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. மேலும் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகியுள்ளார் தன்யா ரவிச்சந்திரன். மேலும் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

பிரஸ்மீட்டில் ஜொலித்த தன்யா

பிரஸ்மீட்டில் ஜொலித்த தன்யா

இதனிடையே படத்தின் பிரஸ்மீட் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதில் தன்யா ரவிச்சந்திரன் அழகான புடவை லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளார். தன்னுடைய அழகான சிரிப்பு ப்ளஸ் அழகான புடவையுடன் தான் ஒரு தமிழ் பெண் என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X