பொங்கலுக்கு ரவிச்சந்திரன் பேத்தியோட க்யூட் வாழ்த்த பாருங்க!
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரன் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Recommended Video
மறைந்த முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற பின்னணியுடன் களமிறங்கினாலும் தன்னுடைய சொந்த திறமையால் முன்னேறி வருகிறார்.
குடும்ப குத்துவிளக்காக படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய கவர்ச்சி போட்டோஷுட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரவிச்சந்திரன் பேத்தி
மறைந்த முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். சிறப்பான பின்புலத்துடன் இவர் களமிறங்கி சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள தன்யா, தற்போது மாயோன், நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள மாயோன் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் ஜோடி
அடுத்ததாக ஜெயம் ரவியின் 28வது படத்திலும் இவர் நாயகியாகியுள்ளார். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் மற்றும் ஜெயம் ரவி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். படத்தில் பிரியா பவானி சங்கரும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இருவருக்கும் சமமான கேரக்டர் என்று கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிசி
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவியுடன் இணைந்து தன்யா நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் தன்யா.

கவர்ச்சிப் புகைப்படங்கள்
தன்னுடைய முந்தைய படங்களில் சிறப்பான ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், தான் கவர்ச்சிக்கும் சளைத்தவரில்லை என்பதை சமீபத்திய போட்டோஷுட்களின் மூலம் நிரூபித்து வருகிறார். இவரது சமீபத்திய புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாகவே காணப்படுகிறது.

பொங்கல் வாழ்த்து
இந்நிலையில் நேற்றைய தினம் பொங்கலையொட்டி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் தன்யா ரவிச்சந்திரன். இந்தப் புகைப்படங்களில் அழகான புடவையில் சிறப்பாக அளவான சிரிப்புடன் காணப்படுகிறார்.

நல்ல அறிமுகம்
அபிராமி என்ற இயற்பெயரை கொண்ட தன்யா சசிக்குமாருடன் நடித்த முதல் படமான பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் சிறப்பான அறிமுகத்தை பெற்றார். ஆனாலும் பிருந்தாவனம் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து கருப்பன் படத்திலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











