Tapsee - உருகி உருகி காதலித்த டாப்சி.. கடைசியில் தோல்விதான் மிச்சம்.. அவரே சொன்ன விஷயம்
சென்னை: Tapsee (டாப்சி) நடிகை டாப்சி தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதை குறித்து பேசியிருக்கிறார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனம் பெற்ற டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

தமிழில் டாப்சி: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் டாப்சி: சூழல் இப்படி இருக்க ஹிந்தி பக்கம் ஒதுங்கினார் டாப்சி. பேபி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் தற்போது டன்கி படத்தில் நடித்திருக்கிறார். ஷாருக்கான ஹீரோவாக நடித்திருக்கும் அப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
காதல் கதை: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், "நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது 10ஆம் வகுப்பு படிக்கும் ஒருவரை காதலித்தேன். உருகி உருகி அந்தக் காதலை செய்தேன். அந்த சமயத்தில் நினைத்தபடி பேசுவதற்கு இப்போது மாதிரி செல்ஃபோன் எல்லாம் கிடையாது. தெரு முனையில் இருக்கும் டெலிஃபோன் பூத்துக்கு சென்றுதான் பேச வேண்டும்
பிரேக் அப்: முதலில் அவருக்கும் என் மீது ஆர்வம் இருந்தது. பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி எனது காதலை உதறிவிட்டார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னார். அதனால் அந்தக் காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அந்த காதல் தோல்வியால் நான் ரொம்பவே அழுதுவிட்டேன். அந்த நினைவுகளில் இருந்து நான் மீண்டு வருவதற்கு பல நாட்கள் ஆகிவிட்டன" என்றார்.


Click it and Unblock the Notifications











