இரண்டாவது முறையாக சீனியர் நடிகருடன் இணைந்த பிரபல நடிகை... விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!
சென்னை: ரீமேக் படத்தில் சீனியர் நடிகருடன் இரண்டாவது முறையாக பிரபல நடிகை ஜோடி சேர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா. தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இதேபோல் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, அங்கேயும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்
இதேபோல் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, அங்கேயும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனால் நடிகை தமன்னாவுக்கு நாடு முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.

வேதாளம் ரீமேக்
இந்நிலையில் தெலுங்கு ரீமேக் படத்தில் சீனியர் நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை தமன்னா. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படம் தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

தெலுங்கில் ரீமேக் ஆகிறது
தமிழில் வெளியான வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இரண்டாவது முறையாக
அவருக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

3 தெலுங்கு படங்களில்
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11ஆம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தமன்னா தற்போது பிளான் ஏ பிளான் பி, போல் சுடியான் என இரண்டு இந்தி படங்களில் நடிக்கிறார். மேலும் எஃப் 3, தட் இஸ் மகாலக்ஷ்மி உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











