twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்பிகா ராதா,நக்மா ஜோதிகா மாதிரி இனியா தாரா ...யார் அக்கா யார் தங்கை?

    |

    சென்னை : திரைத்துறையில் கணவன் - மனைவி இருவரும் நடிப்பது என்பது அனைவரும் சுவாரஸ்யமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. சூர்யா ஜோதிகா, குஷ்பு சுந்தர் சி , ராதிகா சரத்குமார் , சேத்தன் தேவதர்ஷினி என சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகள் உண்டு.

    பல நேரங்களில் படங்களை பார்த்து முடித்த பின்னர்தான் இவர்கள் நிஜ கணவன் மனைவி ஆயிற்றே என நினைக்கத்தோன்றும். அது போலவே அக்கா தங்கைகள் நடிப்பதும் ஒரு ட்ரெண்ட். அவர்கள் மிகவும் அரிதானவர்கள். அந்த வகையில் அரிதான அக்கா தங்கை இருவரும் சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து, விருதுகள் பலவும் பெற்று வருகிறார்கள்.அவர்கள் தான் வாகை சூட வா படத்தின் மூலம் புகழ் பெற்ற இனியா மற்றும் அவரது சகோதரி தாரா .

    மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!

    இனியாவுக்கு விதவிதமான போட்டோஷூட் செய்வது மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் எடுத்த போட்டோஸ் மிகவும் வைரல் . அக்கா தங்கை இருவரும் நடித்து அசத்தி வருகிறார்கள் . இந்த மலையாள சகோதரிகளை எல்லா இடங்களிலும் அவ்வளவு எளிதாக ஒன்றாக பிடிக்க முடியாது .ஆனால் நம் பில்மிபீட் யுட்யூபிற்காக தாரா மற்றும் இனியா ப்ரத்யேகமாக ஒரு பேட்டி கொடுத்தார்கள் . என்ன சுவாரஸ்யங்கள் என்று கேள்வி பதில் மூலம் காணலாம் .

    தாரா இனியா - மலையாள சகோதரிகள்.

    தாரா இனியா - மலையாள சகோதரிகள்.

    கேள்வி : இதில் யார் அக்கா யார் தங்கை?

    இனியா பதில் : பலபேர் என்னதான் அக்கான்னு நெனச்சிகிட்டு இருக்காங்க. நிஜமா பார்த்தா, நான் தான் தங்கச்சி, அவங்க தான் அக்கா.நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு துருவங்கள். சினிமா சீரியல் எப்படி இருந்தாலும் இரண்டு பேரும் கலைத்துறையில் இருக்கோம். அது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்

    குட்டன் பிள்ளையோட சிவராத்திரி படத்தில நடிச்சி ஹிட் ஆகி, நல்லபேர் வாங்கிருக்கா.

    விதவிதமா ரியாக்‌ஷன், மாடுலேஷன் அதுவும் நொடிப்பொழுதுல விதவிதமா குடுப்பா. டைரக்டர் இதான் சுச்சுவேஷன்ன்னு சொன்ன நினைக்கிரத வெரைட்டியா நடிச்சி காட்டுவா.. எத செலக்ட் பன்றதுன்னே தெரியாது. எல்லாமே பெஸ்ட்டா இருக்கும். சும்மா சொடக்கு போடற நேரத்துல வெரைட்டியா நடிக்க கூடிய திறமைசாலி.குஷ்பு மேடம் கூட பாராட்டினாங்க. கேரக்டர் க்கு தகுந்த மாதிரி அவுட்லுக் வித்யாசமா குடுக்கறதுல செம டேலண்ட். இப்படி ஒரு ஆர்டிஸ்ட் பாத்ததே இல்ல-ன்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் டான்ஸரும் கூட. நிறைய ஸ்டேஜ் ல பர்ஃபாமென்ஸும் பட்டைய கெளப்பிருக்கோம். எனக்கு சிஸ்டர்-ங்கிறத விட அவ எனக்கு நல்ல ஃப்ரண்ட்

    எக்‌ஸ்ப்ரஷன் குடுக்க முடியுமா ?

    எக்‌ஸ்ப்ரஷன் குடுக்க முடியுமா ?

    கேள்வி: நேஷனல் அவார்ட் படத்திலெல்லாம் உங்க தங்கச்சி நடிச்சிருக்காங்க ...அவங்க கிட்ட உள்ள ஷ்பெஷலான விஷயங்கள் என்ன ?

    தாரா பதில் : என்னபத்தி எவ்வளவோ சொன்னா.. ஆனா அதல்லாம் விட இவள பாத்து நான் ஆச்சர்ய படுறது, இவளோட க்ரியேட்டிவிட்டிதான். ஒரு ட்ரஸ்-ன்னா கூட பார்த்து பார்த்து அத டெக்ரேட் பண்ணி, அந்த கேரக்டருக்கு, அந்த சிச்சுவேஷன்க்கு ஏத்த மாதிரி க்ரியேட்டிவ்-ஆ செய்வா. வாகை சூடவால டைரக்டர் பாத்து அப்படி ஒரு எக்‌ஸ்ப்ரஷன் குடுக்க முடியுமான்னு தான் கேட்டாரு, ஆனா.. ஆன் த ஸ்பாட்ல உடனே செஞ்சி காட்டினா. காட்டுமல்லிகை பாட்டுல கூட டக்குன்னு இவ போட்ட ஆன் த ஸ்பாட் க்ரியேட்டிவ் ஸ்டெப்ஸ்ல்லாம் அவ்வளவு பிரமாதமா இருக்கும்.

    அக்கா தங்கை சண்டை

    அக்கா தங்கை சண்டை

    கேள்வி : அக்கா தங்கச்சிக்குள்ள என்ன மாதிரியான சண்டைகள் வரும் ?

    தாரா பதில் : நிறைய சண்டைகள் வரும். அது பெரும்பாலும், மேக்கப் கிட், ட்ரஸ் இது சம்பந்தமா தான் வரும். நான் கஷ்டப்பட்டு நெட்லல்லாம் பார்த்து, கமெண்ட்ல்லாம் படிச்சி ஒரு பொருள வாங்கிருப்பேன். அத ஈசியா இவ எடுத்துட்டு போயிடுவா, இல்ல உடச்சிடுவா. ஆனா என் தங்கச்சிகிட்ட உள்ள ஷ்பெஷல், என்ன சண்ட ஆனாலும் அவதான் முதல்ல வந்து பேசுவா.. சமாதானம் செய்வா. அவ மேல தப்பு இருந்தாலும் உடனே சாரி கேட்டுடுவா. அந்த விஷயத்துல அவள ரொம்பவே பிடிக்கும்.

    தம்பியும் நடிகர்தான்

    தம்பியும் நடிகர்தான்

    கேள்வி: உங்களுக்கு ஒரு தம்பி இருக்காரே அவரும் சினிமாவுக்கு வருவாரா ?

    பதில் : அவரு ஏற்கனவே சைல்டு ஆர்டிஸ்டா இருந்தவர்.இரண்டு ஸ்டேட் அவார்டு வாங்கி இருக்காரு . அதுக்கப்புறம் கிரிக்கெட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆகிட்டாரு. இப்போ எம்பிஏ முடிச்சுட்டு பிசினஸ், ஸ்டெடிஸ் தேடி அந்தப் பக்கமா இறங்கிட்டாரு. எங்களுடைய எல்லா சினிமா, சீரியல் டான்ஸ்,ஷோ, எல்லாத்துக்குமே மொதல்ல பிளஸ் அண்ட் மைனஸ் கமெண்ட்ஸ் கொடுக்கிறது தம்பிதான். எந்த தப்பு இருந்தாலும் அதை கரெக்டா சொல்லி காட்டி , அடுத்த தடவ எல்லாம் பண்ணாதே மாத்திக்கோன்னுல்லாம் சொல்லுவாரு.

    அம்பிகா ராதாவா ?

    கேள்வி : உங்கள மாதிரியே இருக்கிற சினிமா சகோதரிகள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது யாரு ?

    பதில்: நக்மா ஜோதிகா, கரீனா கரிஷ்மா, அம்பிகா ராதா. முக்கியமா நீங்க ரெண்டு பேரும் அம்பிகா ராதா போல இருக்கீங்க. உங்கள பார்த்தா அவங்க நியாபகம் தான் வருதுன்னு நிறையபேர் சொல்லிருக்காங்க.

    என்று கலகலப்பான இவர்கள் அரட்டையில், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் பாட கேட்டோம்.

    நீங்களும் அதைக்காண, "பில்மிபீட் தமிழ் " யூட்யூப் சேனலில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

    English summary
    Actress Thara and iniya Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X